book

சேதுபதியின் காதலி

Sethupathiyin Kadhali

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எம். கமால்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

வரலாற்றுப் புதினங்கள் குறைந்து வருகிற இன்றைய இலக்கிய உலகில் திரு.எஸ்.எம்.கமால் அவர்கள் ஒரு வரலாற்றுப் புதினத்தை நமக்கு எழுதி வழங்கியுள்ளார். சேதுநாட்டு வரலாற்றாசிரியராகவும் இதழியலாளராகவும் நமக்குப் பரிச்சயமான திரு.கமால் அவர்கள் இப்புதினத்தின் மூலம் ஒரு படைப்பாசிரியராகவும் நமக்கு அறிமுகமாகின்றார். 'சேதுபதியின் காதலி என்ற இப்புதினம் கி.பி. 1710 முதல் 1728 வரை சேதுநாட்டை ஆண்டு முத்து விசைய ரகுநாத சேதுபதி அவர்களது வழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. மன்னரது பண்புநலன், கொடை, வீரம், கலைப்பணிகள் ஆகியவற்றைப் புதினத்தின் வழி ஆசிரியர் புலப்படுத்தியுள்ளார். வரலாற்றுப் புதினம் படைப்பதில் உள்ள சிக்கல் எழுதப்படுகிற காலகட்டத்துச் சூழல், பழக்க வழக்கங்கள், முதலானவற்றைப் பிழையின்றி எடுத்துக் கூறுவதே. ஆசிரியர் இக்கூறுகளைப் படைப்பதில் பெருத்த வெற்றி பெற்றுள்ளார். ஆசிரியரது மொழி நஉைட எளிமையாகவும் - அதே சமயம் - விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. இத்தகைய இனிய தொண்டுகளையும், அரிய சாதனை களையும் அரசியல் வரலாற்றாக வடித்த இந்த சேதுபதி மன்னரை மக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வத்தில் இந்தப் புதினம் புனையப்பட்டுள்ளது. சேது நாட்டுச் சூழலைச் சுற்றி வருகிற இந்தப் புதினத்தில் பல வரலாற்று நிகழ்வுகளும் பிணைக்கப்பட்டு இருப்பதுடன் கதையின் போக்கிற்கு கை கொடுக்க சில கற்பனைப் பாத்திரங்களும் புகுத்தப்பட்டுள்ளன. அரண்மனையின் முகப்பு ஆசார வாசல் எனப்படும். அரண்மனையின் தோற்றத்தைப் பொதுவாக உற்று நோக்குவதற்கு உதவும் இடம் இந்த ஆசார வாசல். இந்த வரலாற்றுப் புதின மாளிகையின் கற்பனைக் கட்டுமானத்தைக் காணும் போது வியப்பாக உள்ளது.