book

திப்பு சுல்தான் - (ஒலிப் புத்தகம்)

Tipu Sultan : Mudhal 'Vidudhalai Puli'

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :230
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183685689
குறிச்சொற்கள் :Audio Book
Out of Stock
Add to Alert List

விடுதலைப் போராட்ட மரபின் கம்பீரமான சின்னம் திப்பு சுல்தான். ஆங்கிலேயர்களின் நெஞ்சைப் பிளக்கும் ஈட்டியாக இறுதிவரை வாழ்ந்து மறைந்த புரட்சியாளரின் சிலிர்ப்பூட்டும் சரித்திரம் இது.

சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒருபெயர் திப்பு சுல்தான். கொடூரமானவர்;எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம்காட்டியவர்; இந்து மத விரோதி; கோயில்களை இடித்து மசூதிகளைக் கட்டியவர்.இப்படி அடுக்கடுக்காகப் பல குற்றச்சாட்டுகள்அவர் மீது. உண்மை என்ன?

இந்திய சுதந்தரப் போராட்டத்தின் வீரசகாப்தம் திப்பு சுல்தானிடமிருந்து தொடங்குகிறது.வர்த்தகம் செய்ய அல்ல, இந்தியாவைவளைத்துப் போடவே ஆங்கிலேயர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத் தொலைநோக்குப்பார்வையுடன் அடையாளம் கண்டு, எதிர்த்தமுதல் இந்தியர் அவர்.

மீண்டும் மீண்டும் திப்புவைச் சீண்டி, மீண்டும்மீண்டும் தோற்றுப்போனார்கள் ஆங்கிலேயர்கள். துரோகம், சதி, சூழ்ச்சி எதுவும் பலிக்கவில்லை. வேறு யாரைக் கண்டும் அல்ல. திப்புவைக் கண்டு மட்டுமே அஞ்சுகிறேன் என்றுகிழக்கிந்திய கம்பெனிக்கு அவசரம் அவசரமாகக் கடிதம் எழுதினார் அந்நாளையஆங்கிலேய கவர்னர்.

தன் வாழ்நாள் முழுவதும் திப்பு சுல்தான்தேடியது அமைதியை மட்டுமே. அமைதியைத் தேடிச் சென்றவருக்குப் போர்க்களங்கள்மட்டுமே எதிர்ப்பட்டது ஒரு வினோதம்தான்.வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தஒரு மகத்தான போராளியின் மிரட்டும்வாழ்க்கை