book

உழைப்பால் உயர்வோம்

Ulaipaal Uyarvoam

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

உழைப்பு மட்டுமே பொருள்களுக்கு மதிப்புக் கூட்டுகிறது. கல்லை யாரும் வாங்க வருவதில்லை. அதுவே சிற்பமாக மாறினால் அதன் இடுப்பில் மதிப்பு ஏறிக்கொள்கிறது. மழை மரம், மரச்சிலையாக மாறினால் வாசலிலிருந்து வரவேற்புக் கூடங்களுக்குள் நுழைய முடிகிறது. காகிதம் சொற்ப ரூபாய்; அதில் கவிதை எழுதினால் அற்புத விலைக்குச் செல்கிறது. ஓர் உருளைக்கிழங்கு ஒரு ரூபாய்; அதுவே வடிவம் மாறி சிப்ஸாக ஆகி கண்ணாடிக் காகிதத்துக்குள் நுழைந்தால் பத்து ரூபாயாகப் பரிமாற்றம் பெறுகிறது. சந்தை என்பது மதிப்புக் கூட்டுவதைப் பொறுத்தே உயிர்ப்புப் பெறுகிறது.