book

மாவீரன் அலெக்சாண்டர்

Maveeran Alexander

₹377+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எல்.வி. மூர்த்தி
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :312
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789383067473
Add to Cart

ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் அலெக்சாண்டரின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒன்றே !

ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே, நம் எல்லோருக்கும் மாவீரன் அலெக்சாண்டர் பரிச்சயமானவர், பாலபருவத்தில், நம் மதைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியல் போடச் சொன்னால், அவர்களுள் ஒருவராக அலெக்சாண்டர் நிச்சயம் இருப்பார்.

அலெக்சாண்டரின் யுத்த, நிர்வாக, கலாச்சாரப் பரிவர்த்தனைச் சாதனைகள் அற்புதமானவை, பிரமிக்க வைப்பவை. உண்மையில், இவையெல்லாம் அலெக்சாண்டர் என்ற மாபெரும் ஆளுமையின் அடையாளங்கள் மட்டுமே. இவை அனைத்தையும் தாண்டி, இன்னொரு மெய்யான அலெக்சாண்டர் இருக்கிறார். அத்தனைய அலெக்சாண்டரின் விஸ்வரூபத்தை எழுத்துவடிவில் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.

ஆசை, ஆசை, ஆசை, ஆசை ஒரு மனித வடிவெடுத்து வந்தால், அதுதான் அலெக்சாண்டர். சாதாரண மனிதர்கள் 33 பிறவிகள் எடுத்தாலும் கனவு காணக்கூட முடியாத சிகரங்களைத் தன் 33 வயதில் அலெக்சாண்டர் எட்டியதற்குக் காரணம், அவருடைய அடங்காத ஆசை. உலகை வெல்லும் ஆசையைக் கொண்டு சாதித்தவை ஏராளம்.

ஜூலியஸ் சீஸர், நெப்போலியன் புத்தகங்களின் வரிசையில் எஸ்.எல்.வி.மூர்த்தியின் முக்கியமான பதிவு, மாவீரன் அலெக்சாண்டர் !