book

மௌனம் கலையட்டும்

Mounam Kalaiyattum

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜென்ராம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184761221
குறிச்சொற்கள் :பிரச்சினை, சம்பவங்கள், தலைவர்கள், கட்சி, நிஜம்
Out of Stock
Add to Alert List

அதிரடி, சஸ்பென்ஸ், ஆர்ப்பாட்டம், மௌனம், கலகம், குழப்பம், காமெடி, வெற்றி, தோல்வி _ இந்த வார்த்தைகள் சினிமாவைவிட அரசியலுக்குத்தான் முற்றிலும் பொருந்துகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்திய அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறுகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் முதல், மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வரை பல அதிரடி மாற்றங்கள் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளாக நடந்தேறியிருக்கின்றன. உலக அரங்கில் ஒப்பிடும்போது, இந்திய அரசியல் ஒரு திறந்த புத்தகம் என்றாலும் அந்தப் புத்தகத்தில் சில கடினமான வரிகளை வாசிக்க நேர்கிறபோது குடிமக்களுக்கு குழப்பங்கள் ஏற்படுவது சகஜம்தான். அத்தகைய குழப்பமான வரிகளுக்கு விளக்கம் தருகிற பணியை ஜூனியர் விகடனில் 'சிந்தனை' பகுதியில் சமூக அரசியல் விமர்சகர் ஜென்ராம் செய்து வருகிறார். வெறும் அரசியலோடு மட்டும் நின்றுவிடாமல், சமூகத்தில் நிகழ்கிற பல சம்பவங்களையும் சர்ச்சைகளையும் இந்தக் கட்டுரைகள் அலசி ஆராய்கின்றன. ஜூ.வி.யில் வெளிவந்த சிந்தனைக் கட்டுரைகள் 'கூட்டத்திலிருந்து வரும் குரல்', 'மனதின் ஓசைகள்' என்று இரண்டு நூல்களாக ஏற்கெனவே வெளிவந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, இப்போது மேலும் சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 'மௌனம் கலையட்டும்!' என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. உங்கள் அறிவுத்தாகத்தையும் தேடல் வேட்கையையும் தணிப்பதில் இந்த நூல் முனைப்புக்காட்டும். கட்டுரைகள் வெளிவந்த தேதிகளோடு இருப்பதால் இந்நூல் ஓர் ஆவணமாகவும் உங்களுக்குப் பயன்படும். முள்ளை முள்ளால் எடுப்பது போல, சமூகத்தில் இருக்கிற மௌனத்தை இந்த மௌனம'க‌(ல)ளயட்டும்!