book

முத்திரைகளும் அதன் இரகசியங்களும்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :பரணி பப்ளிகேஷன்ஸ்
Publisher :Bharani Publications
புத்தக வகை :மந்திரங்கள்
பக்கங்கள் :144
பதிப்பு :6
Published on :2018
Out of Stock
Add to Alert List

முத்திரைகள் நாட்டியத்தின் பாவனைகளைக் குறிப்பிடப் பயன் படுத்தினர். பின் சங்கேத மொழியாகப் பயன்படுத்தினர். அதன் பின்னர்தான் முத்திரைகள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்றறிந்தனர். எங்கு யாரால் எதற்காகப் பயன்படுத்தினாலும் அந்த முத்திரை அவர்களின் நரம்பு மண்டலத்தில் சில செயல்களைச் செய்து அவர்களை அறியாமல் அவர் நல்வாழ்விற்கு உற்ற துணையாகின்றது. எந்த முத்திரையானலும் பயின்று பயன் படுத்துவதால் உடலுக்கு எந்த கேடும் விளையாது. முத்திரைகளினால் நன்மையைத் தவிர வேறொன்றுமில்லை. உடலில் வியாதிகள் தோன்றாமலிருக்க உதவும். இருக்கும் வியாதிகள் விரைவில் குணமடைய உதவிகரமாக இருக்கும்.கடுமையான தவம், உடல் வருத்தும் பயிற்சிகள் மற்ரும் கசப்பான மருந்துகள் என்ரு எதுவும் இல்லாமல் மனித ஜீவ உயிர்கள் ஆரோக்கிய ஆனந்தமாக வாழ முதல் சித்தன் சிவன் சித்தர்கள் மூலம் நமக்குத் தந்ததை முடிந்த வரையில் பயிற்சி செய்து பலன் பெற்று ஆரோக்கிய வாழ்வு வாழ ஆசி வழங்கும் முத்திரைகள்- எல்லோரும் செய்து பழகலாம். வேறு சிகிச்சை மேற்கொண்டு இருப்பவர்களும் செய்யலாம். எந்த சிகிச்சை முறைக்கும் எதிரானது அல்ல. உடலில் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து சக்திகள் சேரவேண்டிய இடத்திற்கு முறையாக சேர உதவுகிறது. யோகப் பயிற்சியில் சொல்லியது போல உள்ளே இழுக்கும் பூரகம் மூச்சை விட, வெளியே விடும் ரேசகம் மூச்சு இரு மடங்கு இருந்தால் அது ஆரோக்யம் ஆகும். எந்த அமர்ந்த நிலையிலிருந்தும் உங்கள் வசதியைப் பொருத்து செய்யலாம். கழுத்து, தலை, முதுகுத்தண்டு ஆகியவை நேராக இருக்கவும். முத்திரை செய்யும் கை எந்த உதவியையும் உறுதுணையையும் பெற்றிருக்கக்கூடாது.