book

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் பதில்கள்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788184027266
Add to Cart

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக-வின் நிறுவனருமான மறைந்த எம் ஜி ராமச்சந்திரனின் 96-வது பிறந்த நாள் ஜன-17 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அஇஅதிமுக ஏற்பாடுகளை செய்துள்ளது.1917-ஆம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள் இலங்கையில் கண்டி அருகே உள்ள நாவலபிடியாவில் பிறந்தது இந்த அழியா தாமரை. தந்தை கோபால மேனன், தாயார் மருதூர் சத்யபாமா.
மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்ட இந்த சந்திரன், பின்னாளில் எம்ஜிஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். அது தவிர மக்கள் திலகம், இதயக்கனி, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் என்ற பட்டங்களும் உண்டு.
சிறுவயதில், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார்.