book

உயிர்த்தலம்

₹245+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆபிதீன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :271
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384641283
Add to Cart

 1980களில் கதை சொல்ல வந்த ஆபிதீன், நவீன தமிழ்ச் சிறுகதைகளுக்குச் சிறப்பான முகங்கொடுத்தார்.
சாமான்ய இஸ்லாமியர்களின் நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், அடங்க மறுக்கும் சுயநலங்கள், ஆன்மீகத்தின் போர்வையால் மறைந்து கிடக்கும் சிறுமைகள் என பேரழகுக் கோலங்களாலும் அதற்கு நிகரான வசைகளாலும் வார்த்தெடுத்த பாத்திரங்கள், ஆபிதீனின் கைபட்டு உயிர்பெற்று உலா வருகின்றன.
1975களில் உருவான மத்திய கிழக்கு நாடுகளின் தொழில்வாய்ப்பின் பின்னரான தமிழ்நாடு முஸ்லிம்களின் வாழ்வின் முக்கிய சில கூறுகளையாவது மிகத் துல்லியமாகத் தரிசிக்கும் பாக்கியத்தை இந்தக் கதைகள் மூலம் ஆபிதீன் எனும் கலைஞன் நமக்கு முன்வைக்கிறார்.

ஆரம்பமும் முடிவும் இல்லாது நமது தேடல்களுக்கும் ஊகங்களுக்கும் இடமிட்டொதுங்கும் பதிவுகள் ஆபிதீன் கதைகள்.

எஸ்.எல்.எம். ஹனீபா