book

கவர்மென்ட் பிராமணன்

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரவிந்த மாளகத்தி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :159
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384641290
Add to Cart

இந்த நூல் கன்னட எழுத்தாளர் அரவிந்த் மாளகத்தியின் சுயசரிதையாகும். கவர்மென்ட் பிராமணன் என்று கூறப்படுவது ஏன் என்றால் அவருக்கு அளிக்கப்படும் அரசு சலுகைகளின் மீதான கேலி எனலாம். முழுக்க அவரின் ஒவ்வொரு வாழ்வின் நிகழ்வுகளும் இதில் கூறப்படுவதில்லை என்றாலும் குறிப்பான பலவையும் அவர் தேர்ந்தெடுத்து இதில் தொகுத்திருக்கிறார். தொடர்ச்சியாக பல நூல்களும் இவர் எழுதி வருகிறார்.

         ஏறத்தாழ தாழ்த்தப்பட்ட பலரும் அனுபவித்த கொடுமைதான் முதல் சில அத்தியாயங்களில் குறிப்பிடப்படுவது. பள்ளி ஆசிரியர் அரவிந்த் மாளகத்தியை கடுமையாக அடித்து நொறுக்குவது. தினசரி வகுப்பறையைக் கூட்டுவது என்று அதனை செய்யவில்லை என்றால் அவர்களை சாதிப்பெயர் கூறி கடுமையாக தண்டிப்பது. ஏறத்தாழ எனக்கும் எனது ஆசிரியர் பாலுச்சாமி நாயக்கர் நினைவுக்கு வருகிறார். அவர் ஒவ்வொருநாளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தினமும் இறைவனிடம் பிரார்த்திப்பது மூன்றாம் வகுப்பில் எனது அந்த ஆண்டிற்கான இலக்கு, திட்டம், லட்சியமாகவே இருந்தது.  இதில் அரவிந்த் என்பது இவரது பெயர். மாளகத்தி என்பது இவரது சாதிப்பெயர்.