book

எங்கே உன் கடவுள்?

Enge Un Kadavul?

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாரு நிவேதிதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384149543
Out of Stock
Add to Alert List

துக்ளக் இதழில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில்.***“ஒரு செருப்புக்கே இவ்வளவு யோசிக்கும் நீ உன் புருஷனைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டாயே?” என்பேன் அவந்திகாவிடம். அதற்கு, “இதையெல்லாம் கிண்டல், நகைச்சுவை என்று நினைத்துக்-கொண்டு பேசும் உங்களை எப்படி எல்லோரும் படிக்கிறார்கள்?” என்று எதிரடி கொடுப்பாள்.

***துக்ளக்கில் நான் எழுதுவேன் என்று ஒரு மாதத்திற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால், 20 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு அடைந்த ஆச்சரியத்தையே அடைந்திருப்பேன். வாய்ப்பு அளித்த துக்ளக் ஆசிரியருக்கு நன்றி.

***“வாராவாரம் எதை எழுதப் போகிறீர்கள்?” என்றார் நண்பர். “ஐ.நா. சபையில் போர்ச்சுகல் நாட்டு மந்திரி பேசவேண்டிய பேச்சை தன்னுடைய பேச்சாக நினைத்துக்கொண்டு பேசும் பேர்வழியெல்லாம் இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருக்கும்போது எழுதுவதற்கான விஷயத்துக்கா பஞ்சம்” என்று பதில் சொன்னேன்.