book

சவிட்டு நாடகம்

Savittu Nadagam

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப. செல்வராஜ்
பதிப்பகம் :தி பார்க்கர்
Publisher :The Parkar
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :366
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190759946
Out of Stock
Add to Alert List

நாட்டுப்புறக் கலைவடிவங்களில் சவிட்டு, நாடகம், தனக்கென உரித்தான சிறப்பும், வரலாற்றிப் பெருமையும் மிக்க கலைவடிவமாகுமம். சவிட்டு நாடகத்தில் கட்டியங்காரனின் பங்கு குறிப்பிடதக்கதாகும். ‘கட்டியங்காரனைப் போல நிகழ்காலம் காட்டும் கடிகை சமஸ்கிருத நாடக மரபில் இல்லை’ என்ற கருத்து ஏற்கத்தக்கதேயாகும். சவிட்டு நாடகங்கள் தமிழ் மொழியிலேயே வழக்கிலிருந்து வந்துள்ளன. இன்றும் சவிட்டு நாடகப் பாடல்கள் தமிழிலேயே உள்ளன. சில ஏடுகள் மலையாள லிபியில் எழுதப்பட்டுள்ளன. சவிட்டு நாடக ஆசிரியர்கள் அண்ணாவி மார்கன் என்றே இன்றும் குறிப்பிடப்பட்டு வருவதைக் காணலாம். ‘சின்னத்தம்பி’ அண்ணாவியே சவிட்டு நாடகத்தின் ஆசானாக விளங்கினார் எனச் சவிட்டு நாடகக் குழுமக்களின் ஆசான்மார்கள் கூறினார். செவிவழிச் செய்திகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன. சவிட்டு நாடகத்தின் மொழியமைப்பைக் கொண்டு பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுவரை கேரளத்தில் தமிழ்மொழி வழக்கிலிருந்து வந்துள்ளது என்றறிய முடிகின்றது.