-
பத்துப்பாட்டு 279 புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும் தான்.பொய்யா மலைத்தலைய கடற்காவிரி புனல் பரந்து பொன்கொழிக்கும் விளைவுஅரு வியன்கழனி' (பட்டி. 1-8) என்று அவர்தம் பட்டினப்பாலையானது தொடங்கப் படுகின்றது. இவ்வாறு புலவர்களெல்லாம் தாங்கள் இயற்றும் கவிதையிலே உலக வாழ்வினுக்கே முதலிடம் தந்து போற்று கின்ருர்கள். பெயல் இன்றேல், நானிலமும், அவற்றில் வளரும் புல்லும் மரமும், வாழும் பறவையும் விலங்கும், மனித னும் தலை தூக்குவதெங்கே? 'விசும்பின் துளிவிழின் அல்லான்மற் ருங்கே பசும்புல் தலைகாண் பரிது. என்று பொய்யாமொழி வள்ளுவர் புகலவில்லையா? அச் சொல் அன்றும் இன்றும் மட்டுமன்றி. என்றும் நிலைபெற்ருேங்கும் ம்ெய்ச்சொல்லன்ருே எனவேதான் கவிதை பாடும் புலவர்கள், வான் சிறப்பையும் அதன்வழி வையத்தின் வாழ்வையும் முதலில் எண்ணிப் பாடுகின்ருர்கள். இவ்வடிகளை யெல்லாம் பொருள் விரித்து விளக்கிக்கொண்டே செல்லின், இந்நூல் இடம் தாராது. அறிஞர் இவற்றின் பொருள்களைத் தெள்ளி தின் உணர்வார்கள். அல்லார் உற்ற நூல்களின் வழிக்கண்டு கொள்ள்லாம் எனக்கூறி, மேலே செல்கின்றேன். இப் பத்துப்பாட்டுள் ஐந்து ஆற்றுப்படைகளாய் அமை கின்றன. நான்கு. அப்பெயரிலேயே திருமுருகாற்றுப் படை. பொருநராற்றுப்படை என அமைகின்றன. இறுதியிலுள்ள மலைபடுகடாம் பெயரளவில் வேருகக் காணினும், பொருள் அளவில் கூத்தர் ஆற்றுப்படையாக அமைகின்றது. எனவே, பத்தில் ஐந்து ஆற்றுப் படைகளாம். "ஆற்றுப்படை என்பது என்ன? ஆற்றுப்படுத்தல் அதாவது, வழிகாட்டுதல் என்பது அதன் தெளிந்த பொருள். எதற்கு வழிகாட்டுவது? வாழ வழி காட்டுவது. யார் வாழ? வாழவேண்டியவர் வாழ;
-
இந்த நூல் வையம் போற்ற வாழ்ந்து காட்டுவோம், சோ. அருணாசலம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வையம் போற்ற வாழ்ந்து காட்டுவோம், சோ. அருணாசலம், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,சோ. அருணாசலம் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.
|