book

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 18

₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :அதீத பப்ளிகேஷன்ஸ்
Publisher :Atheetha Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :800
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

ஆன்மீகப் புத்தகங்களை எழுது வதற்கு முன்பாக அதன் ஆசிரியர், தனது ஆன்மீக குரு, பூர்வீக ஆச்சாரியர்கள், மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி மங்களாசரணம் செய்வது வேதப் பண்பாடு. அதன்படியான மங்களாசரணத்துடன் பகவத் கீதையின் அறிமுகத்தை எடுத்துரைக்கும் ஸ்ரீல பிரபுபாதர், எத்தனையோ பகவத் கீதை ஏற்கனவே உள்ள சூழ்நிலையில், அவற்றின் ஒவ்வொரு கருத்துரையாளரும் தனது சொந்த அபிப்பிராயத்தையே பெரும்பாலும் வெளிப்படுத்தியிருப்பதால், பகவத் கீதை உண்மையுருவில் என்னும் இப்பதிப்பிற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக விளக்குகிறார்.ஒரு மருந்தை நாம் உட்கொள்ள விரும்பினால், அதன் தலைப்புக் காகிதத்தில் கூறப்பட்டுள்ளபடியோ, ஒரு மருத்துவரின் அறிவுரைப்படியோ அதனை உட்கொள்ள வேண்டும். அதுபோலவே பகவத் கீதையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியபடியே ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பது கீதையின் ஒவ்வொரு பக்கத்திலும் கூறப்பட்டு, அது பல்வேறு மிகச்சிறந்த ஆச்சாரியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பகவத் கீதை, குரு சீடப் பரம்பரையின் மூலமாக உணரப்பட்டு வந்ததாக கிருஷ்ணர் (4.1-3) கூறுவதால், நாமும் கீதையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், குரு சீடப் பரம்பரையில் வருபவரை அணுகுதல் அவசியம்.தனது நண்பனாகவும் பக்தனாகவும் அர்ஜுனன் இருப்பதால், இந்த பரம இரகசியத்தை அவனிடம் உரைப்பதாக பகவான் கூறுகின்றார். ஞானி, யோகி, பக்தன் என்று மூன்று விதமான ஆன்மீகவாதிகள் இருந்தாலும், பகவத் கீதையை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவர் அர்ஜுனனைப் போன்று பக்தராக இருத்தல் அவசியம். பகவானுடன் ஒருவர் சாந்தமாக, சேவகராக, நண்பராக, பெற்றோராக, அல்லது காதலராக உறவுகொள்ள முடியும். பகவானுடனான அந்த திவ்யமான உறவு முறையினை பக்திமய சேவையில் பக்குவமடையும்போது நம்மால் உணர முடியும். நமது தற்போதைய நிலையில் பகவானை மட்டுமின்றி அவருடனான நமது நித்திய உறவையும் நாம் மறந்துள்ளோம்; பக்தித் தொண்டில் ஈடுபடுவதால் நாம் நம்முடைய சுயநிலைக்குத் திரும்ப முடியும். மேலும், அர்ஜுனன் எவ்வாறு பகவத் கீதையை ஏற்றுக் கொண்டானோ (10.12-14), அதே போன்று நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்ட அர்ஜுனன், தனது கூற்றினை உறுதிப்படுத்துவதற்காக, நாரதர், வியாசர், அஸிதர், தேவலர் போன்ற மாமுனிவர்களும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுள்ளதை மேற்கோள் காட்டுகிறான். கிருஷ்ணர் கூறியவை அனைத்தையும் முற்றிலுமாக அர்ஜுனன் ஏற்றுக் கொண்டான். எனவே, கீதையானது குரு சீடப் பரம்பரையில், பக்தி உணர்வுடன், கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்று, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.