book

நீதிக் கதைகள் புதையல் எலியின் பயம்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :P. அழகியநாதன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :நீதிகதைகள்
பக்கங்கள் :20
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788177351590
Out of Stock
Add to Alert List

உடனே அவர்கள் எலி வளையிருந்த இடத்தை வெட்டத் தொடங்கினார்கள். உண்மையில் அங்கு அவர்களுக்குத் தங்கப் புதையல் கிடைத்தது. அவர் கள் அந்தத் தங்க நாணயங்களை எடுத்துக் கொண் டார்கள். நான் பயந்து போய் வேறொரு வளையில் பதுங்கிக் கொண்டேன். மறுபடி பசியெடுத்த போது, நான் அங்கு சோறு தின்னப் போனேன். அந்தத் துறவி துரத்திக் கொண்டு வந்து என்னை அடித்து விட்டான். அன்று முதல் இன்றுவரை அந்த மடத் திற்குத் திரும்பிப் போகவே எனக்குப் பயமாக இருக்கிறது. இப்போது ஒர் ஆண்டாகக் காட்டில் தான் இருந்து வருகிறேன்.

‘அறிவும் கல்வியும் நன்மையும் பயனும், வன்மையும் இன்பமும் எல்லாம் பொருளினால்தான் உண்டாகின்றன.

“சுதியில்லாத பாட்டும், உறவினர் இல்லாத நாடும், அறிவில்லாதவர் கவிதையும், நல்ல மனைவி யில்லாத வீடும், கணவன் இல்லாத பெண்ணின் அழகும் வீண் பாழே! பொருள் இல்லாதவர்களுக்கு உலக வாழ்வே பாழ்!

கதிரவன் இல்லை யென்றால் கண்ணுக்குத் தெரிவன எல்லாம் மறைந்து போகும். அது போல் பொருள் இல்லாதவர்களுக்கு எல்லா நன்மைகளும் மறைந்து போகும்.