book

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதை

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சோமு
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :77
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு, இப்போது 94-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியாவில் பொதுவுடைமை சித்தாந்தம், என்னதான் 1,800-களின் இறுதியில் நுழைந்திருந்தாலும், அதன்பின்னர் நிறைய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றியிருந்தாலும், பொதுவுடைமையை இந்தியாவில் படரச் செய்ததில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு மிகவும் முக்கியமானது எனலாம். நிறைய ஒடுக்குமுறைகளைத் தாண்டியே சி.பி.ஐ., மக்களிடம் பொதுவுடைமைக் கருத்துகளைக் கொண்டு சேர்த்தது.

உதாரணமாக, 1948-ம் ஆண்டு இந்தியாவில் சி.பி.ஐ தடை செய்யப்பட்டதை எடுத்துக்கொள்ளலாம். ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால், ரஷ்யாவில் உள்ள கம்யூனிஸ்ட்களின் வழிகாட்டுதலால் இந்தியாவிலும் புரட்சி செய்வார்கள் என்று தடைக்குக் காரணம் சொல்லப்பட்டது. என்றாலும், 1952-ம் ஆண்டு தேர்தலில்  தலைமறைவாக இருந்துகொண்டே பிரசாரத்துக்குப் போகாமலேயே தோழர் ராமமூர்த்தி மற்றும் சிலர் வெற்றிபெற்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது, சி.பி.ஐ-க்குப் பின்னாளில் மிகப்பெரிய சறுக்கலைத் தந்தது. அதுமட்டுமன்றி, பொதுவுடைமைக் கட்சிகளைச் சாடுவோர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, இந்தப் பிரிவு. அத்தகைய பிளவு ஏற்படக் காரணம், 1962-ல் இந்தியா - சீனா இடையே நடைபெற்ற போர்தான். இந்த விவகாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. ஆனால், அந்த முடிவைத் தோழர்கள், சிலர் ஏற்க மறுத்தனர். அவர்கள், சீனா பொதுவுடைமை நாடு என்பதால், சீனாவை ஆதரித்தால் இந்தியா பொதுவுடைமை நாடாக மாறிவிடும் என்று நம்பினார்கள். அதன் காரணமாக, அவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) என்ற கட்சியை உருவாக்கி சீனாவுக்கு ஆதரவு அளித்தனர். அதன் பின்னர், பல்வேறு தருணங்களில் சி.பி.ஐ-யுடன் இணைந்து சி.பி.எம் செயல்பட்டது வேறு விஷயம். எனவே, அந்தப் பிளவை சண்டை என்றோ, முரண் என்றோ எடுத்துக்கொள்ளாமல் தாங்கள் சார்ந்த கருத்தியலில் கொண்ட பற்று, உறுதி என்ற பார்வையில் பார்க்க வேண்டும்.