-
இந்நூல், பன்னிரண்டு பாவபலன்களுள் முக்கியமான பலவற்றைக் கூறும் நூலாகும்.
சங்கர கவி என்பவர் இந்நூலை இயற்றியுள்ளதாகத் தெரிய வருகிறது. அறுசீர்
விருத்தம் என்னும் செய்யுள் வடிவில் ஆக்கப் பட்டுள்ள இந்நூல், அந்தாதியாக
அமைந்துள்ளது. அதாவது, ஒரு பாடலின் இறுதி அடியில் உள்ள சொல்லையோ, சீரையோ,
அசையையோ அடுத்த பாடலின் தொடக்கமாகக் கொண்டு, நூல் முழுவதும் அமைந்துள்ளது.
வடமொழியில் 'சர்வார்த்த சிந்தாமணி' என்னும் ஜோதிட நூல் ஒன்று உள்ளது. அதை
இயற்றியவர் வெங்கடேச தெய்வக்ஞர் என்பவராவார். அது, பரந்து விரிந்த நூல்.
ஜோதிடத்தைப் பற்றிய அடிப்படைத் தகவல்களிலிருந்து பாவபலன்கள் வரை அந்நூலில்
சொல்லப்பட்டிருக்கின்றன. அந்நூலைத் தழுவித்தான் இந்நூலைத் தமிழில்
இயற்றியிருக்கிறார் சங்கர கவி. அந்நூலின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு தமது
நடையில் இந்நூலை அமைத்திருக்கிறார். அந்நூலில் உள்ள ஆரம்பநிலைச்
செய்திகளையெல்லாம் விட்டுவிட்டுப் பாவபலன்களை மட்டுமே
தமிழ்ப்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே ஜோதிடத்தைப் பற்றிய அடிப்படை
விஷயங்கள் தெரிந்தவர்கள் அந்தக் கலையில் மேலும் ஆழம் காணவேண்டும் என்பதே
சங்கர கவியின் நோக்கம் என்பதை நாம் உணரமுடிகிறது. நீங்கள் தற்பொழுது
வாங்கவிருக்கும் இந்நூலை இக்காலத்திற்கு ஏற்றபடி தெளிவான எளிய உரையில்
எழுதியுள்ளார் தேவசேனாதிபதி. ஜோதிட அன்பர்களுக்கும்,
ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரிதும் இது உதவும். படியுங்கள், பயன் பெறுங்கள்.
-
இந்த நூல் சங்கரகவி இயற்றிய சர்வார்த்த சிந்தாமணி மூலமும் உரையும், செ. தேவசேனாதிபதி அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சங்கரகவி இயற்றிய சர்வார்த்த சிந்தாமணி மூலமும் உரையும், செ. தேவசேனாதிபதி, , Jothidam, ஜோதிடம் , Jothidam,செ. தேவசேனாதிபதி ஜோதிடம்,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy books, buy Sri Indu Publications books online, buy tamil book.
|