book

பாரதி என்றொரு மானுடன்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :190
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123426150
Add to Cart

கோவை மாநகரில் பீடுநடை போட்டு வரும் கங்கா மருத்துவமனையின் நிறுவனர், பல் மருத்துவர் டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன் அவர்களின் சகோதரர் மருத்துவர் ஜே.ஜி. சண்முகநாதன் அவர்கள் 82 அகவையில் தமிழ்ப்பற்றோடு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாரதியாரைப்பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அந்த ஆய்வேடு "பாரதி என்றொரு மானுடன்' என்ற நூலாகச் சென்னையில் பாரதியார் சங்கத்தால் வெளியிடப்பட்டது. அந்நிகழ்வு சென்னை இந்திய அலுவலர் சங்க நூற்றாண்டு வளாகக் கூட்டரங்கத்தில் (இராயப்பேட்டை) சிறப்பாக நடைபெற்றது. சரியாக காலை 9 மணிக்கு திருமதி மீனாட்சி ஸ்ரீனிவாசன் குழுவினர் பாரதியார் பாடல்களால் இசை விருந்தளித்தனர்.