book

திரையிசையும் தமிழிசையும்

₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் அ. இன்பரதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :217
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788177357721
Out of Stock
Add to Alert List

தமிழ்த் திரையிசை, தமிழ் செவ்வியல் இசையின் நீட்சியைக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நம்முடைய தமிழ்த் திரையிசை, சங்கப் பாடல் மரபில் இருந்து ஆரம்பிக்கிறது. கி.பி.13-ம் நூற்றாண்டு வரை இந்திய இசையின் தோற்றுவாயாக தமிழ் செவ்வியல் இசையே இருந்துவந்த நிலையில், அவற்றுடன் அரேபிய இசையும் பாரசீக இசையும் இணைந்து ஹிந்துஸ்தானியாக உருவெடுத்தது. மொகலாய மன்னர்களின் படையெடுப்புக்குப் பின்னர், ஹிந்துஸ்தானியே அரசவை இசையாகவும் பொழுதுபோக்கு இசையாகவும் வளர்ச்சி பெற்றது. `இசையை நீண்ட நேரம் ஆலாபனை செய்யும் முறை தமிழ் இசையின் ஒருவிதமான வளர்ச்சி’ என்கிறார் இசை ஆய்வாளர் ந.மம்மது. இந்திய இசையே தமிழிசையின் மறு ஆக்கம் என்னும்போது, தமிழ்த் திரையிசையின் மூலத்தை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இருந்து கணக்கிட இயலாது.

பக்தி இலக்கிய காலத்தில் இருந்தே சந்தங்களை வைத்து எழுதும் முறை தமிழில் தொடங்கிவிட்டது. திருஞான சம்பந்தரைத் தொடர்ந்து அருணகிரிநாதர்ஆக்கியளித்த சந்தப்பாடல்கள்  கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. `சந்தமும் இசையும் ஒன்றா?’ என்று கேட்கலாம். இசை ஒழுங்கு கைவரப் பெறாமல் சந்தங்களைஅமைக்க முடியாது. இசையின் உள்ளமைதியே சந்தங்களுக்குப் பிரதானம். யாப்பிலக்கணத்தின் அடிப்படை இத்தகைய சந்த ஒழுங்குகளைக்கொண்டேஅமைக்கப்பட்டுள்ளன.

பள்ளு நாடகம், குறவஞ்சி நாடகம், குழுவ நாடகம் எல்லாமும் சந்தத்தின் பிரதிகளாகவே அமைந்தன. அதில் இருந்துதான் லாவணி, வில்லுப்பாட்டு, கதாகாலாட்சேபம் தொடங்கின. செவ்வியல் இசைக்கேற்ற கீர்த்தனைகள் ஒருபுறமும், நாட்டார் இசையின் சந்தக் கட்டுமானம் இன்னொருபுறமும் இணைந்ததே தமிழிசையாக அறிகிறோம். இந்த இரண்டையும் சரிவரப் புரிந்திருந்த சங்கரதாஸ் சுவாமிகள் தமிழிசையின் முன்மாதிரிகளை உருவாக்கித் தந்திருக்கிறார். ஏறக்குறைய 4,000 பாடல்களுக்கு மேல் அவரால் எழுதப்பட்டிருக்கின்றன. சந்தங்களின் அழகுகளையும், கீர்த்தனைகளின் நயங்களையும் அந்தப் பாடல்கள் கொண்டிருக்கின்றன. கதைகளைக்கூட பாடல்களின் வாயிலாகச் சொல்லியும் கேட்டும் வந்த நம்முடைய பாரம்பர்யத்தை வளர்த்தெடுத்தவராக அவரைச் சொல்லலாம். அவரே இன்றைய திரையிசைப் பாடல் வடிவின் மூலகர்த்தா.