book

கேட்டிருப்பாய் காற்றே

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. குறிஞ்சிவேந்தன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788177357752
Add to Cart

 சத்தியஜித்ரே என்ற கலைஞன் ஏழு வயது சிறுவனாக 1928இல் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களை சந்தித்த பொழுது அந்த சிறுவனிடமிருந்த சிறிய குறிப்பு புத்தகத்தில் கவிஞர் எழுதிய வரிகள்தான் இவை.

சத்ய ஜித்ரே தன் தாயாருடன் தாகூரை காணச் சென்றிருந்தார். அப்பொழுது கவி தாகூர் சிறுவனிடம் கவிதை எழுதி கொடுத்து “இந்த கவிதை வரிகள் இப்பொழுது புரியாமல் போகலாம் ஆனால் நீ வளர வளர இந்த கவிதை வரிகளை எடுத்துப் படித்துப் பார். ஒரு கால கட்டத்தில் உனக்கு அவற்றின் பொருள் புரியும்” என்றார்.

உலகப் புகழ்பெற்ற கலைஞரான சத்யஜித்ரே 1921ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தார். கவி தாகூரின் சாந்தி நிகேதனம் என்ற பல்கலைக்கல்லூரியில் ஓவியக் கல்வியை கற்றார்.

சிறுவயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் இருந்த ஈடுபாடும் ஓவியத் திறமையும் விளம்பரத்துறையில் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்தியது. இந்த காலகட்டத்தில் நிறைய நாவல்களை வாசித்தார்.

விபூதி பூஷணனின் பதேர் பஞ்சாலியை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்கு அட்டைப் படம் வரைய ரே ஒப்புக்கொண்டிருந்தார். அந்த நாவலை திரைப் படமாக்க வேண்டும் எண்ணம் ரேக்கு ஏற்பட்டது. அவர் பணியாற்றிய நிறுவனம் பயிற்சிக்காக ஆறு மாதகாலம் லண்டனுக்கு அனுப்பி வைத்தது. அவர் லண்டனில் இருந்த பொழுது ஏராளமான உலக திரைப்படங்களைப் பார்த்தார்.

அங்கு அவர் பார்த்த திரைப்படங்களில் “சைக்கிள் திருடன்” என்ற திரைப்படம் அவரை கவர்ந்தது. இதுபோன்ற திரைப்படங்கள் உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. லண்டனிலிருந்து இந்திய திரும்பும் பொழுது கப்பலிலேயே, பதர் பாஞ்சாலியின் திரைக்கதை வசனத்தை எழுதினார்.

1952 ஆம் ஆண்டு பதர் பாஞ்சாலி படப்பிடிப்பு தொடங்கியது. காலையின் பாடல் என்ற பதர் பாஞ்சாலி ரேக்கு பெரும் புகழ் ஈட்டி கொடுத்தது. இந்திய சினிமா அதுவரை காட்டாத உலகை காட்டியது.

“பதேர் பாஞ்சாலி 1955ஆம் ஆண்டு வெளியானது, கேன்ஸ் திரைப்பட விழாவில்” மனித வாழ்வின் நிறங்களை ஆவணப்படுத்தியுள்ள சிறந்த படைப்பு என விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரே பல படங்கள் எடுத்தார். உலக திரைப்பட அரங்கில் வலம் வந்தன.

சத்யஜித்ரேயை கெளரவிக்கு முகமாக இந்திய அரசு அவரது உருவமும் பதேர் பாஞ்சாலியில் இடம்பெற்ற ஒரு காட்சியும் கொண்ட தபால் தலையை வெளியிட்டது.

ரே இதுவரை 29 திரைப்படங்களும் 8 ஆவணப்படங்களும் எடுத்துள்ளார். இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனரான சத்யஜித்ரே 1992 ஆம் ஆண்டு காலமானார். ஆனால் அவருடைய திரைப்படங்கள் இன்றும் பேசப்படுகின்றன. சினிமாவைப் பற்றி அதன் சிறப்பை பற்றி அறிய விரும்புகிறவர்கள். ஒவ்வொருவரும் ரேயின் திரைப்படங்களை பார்க்க வேண்டும்.