book

மீண்டும் ஒரு மழைக்காலத்தில் 21 சிறுகதைகள்

Meendum Oru Mazhaikalathil 21 Sirukathaigal

₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் தியாரூ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :193
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427256
Add to Cart

மனிதாபிமானமும், சமூகப் பிரக்ஞையும், சிந்தனைத் தெளிவும் உள்ள சிறந்த, 21 கதைகள். ‘சாமுத்யகா’ என்ற முதல் கதையே தனிச்சிறப்பு வாய்ந்தது. மலர் விட்டு மலர் தாவும் வண்டு போன்ற கதாநாயகன். ஆனால், அவன் அன்பு மனைவியையே, ஒரு மாற்றான் காமப் பார்வை பார்க்கிறான் என்று உணரும் சமயத்தில், அவன் தவறு, அவனுக்கு உறைக்கிறது.
நடைபாதை வாசிகளை நேசியுங்கள் என்று சொல்லும் கதை, ‘தெருநேரத் தாமரை!’ சில மனிதர்களின் அன்புக்கு பின்னால் சுயநலம் ஒளிந்திருக்கும் என்று விளக்குவது, ‘என்ன தவம் செய்து விட்டேன்?’
உறவுகளை உதாசீனப்படுத்தி விலகி ஓடும் மனநிலை தவறு என்று விளக்குகிறது, ‘தாய் மடி!’. ஏழைப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதை சொல்லி உருகும் கதை, ‘தங்கக் காசு!’
கவிஞர் தியாரூவின் கவிதைகளும், உரைநடை இலக்கியங்களும் பல நூல்களாக வெளியிடப்பட்டு, வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. குறுகிய கால இடைவெளியிலேயே, பல நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த சிறுகதை தொகுதியும் பல பதிப்புகள் காணும்.