book

பொழுதுகளை வேட்டையாடுகிறவன்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேதுபதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :137
பதிப்பு :1
Published on :2014
ISBN :9798177359670
Add to Cart

சேதுபதியின் மேடைப் பேச்சில் கவிதைத் தெறிப்புகளைக் கூர்ந்து கவனிக்கிற போது அவை கவிதைக்குள் அடைபடுகிறதைப்பற்றி யோசித்துப்பார்த்திருக்கிறேன். தமிழகத்தின் சிறந்த மேடைப்பேச்சாளர்களின் பட்டியலில் அவர் பெயர் சமீப ஆண்டுகளில் எப்போதும் இருந்திருக்கிறது. அந்தப்பட்டியல் வெகு நீளமானதல்ல. ஆனால் அவரின் கவிதை முயற்சிகள் மேடைத் தெறிப்புகளைத் தவிர்த்துவிட்டு இயங்கி வருவதை அவரின் தொகுப்புகள் மூலம் இனம் காண எவராலும் முடியும். அப்படியரு தொகுப்புதான் சமீபத்திய “பொழுதுகளை வேட்டையாடுகிறவன்.”

இத்தொகுப்பில் அமைந்திருக்கும் கவிதைகளைப் பாகுபடுத்துகிற சிரமத்தை வாசிப்பவர்களுக்குத் தர வேண்டாம் என்று சுமார் 10 பிரிவுகளாக்கித் தந்திருக்கிறார். அது “கவிதையும் நானும்” என்பது முதல் “பழங்கதையன்று” என்பது வரை விரிந்திருக்கிறது. வெவ்வேறு வகையான அனுபவங்களில் திளைத்திருப்பது தெரிகிறது: “என்னில் இருந்து பிறந்த கவிதை, நான் என்பதே பன்மை” என்பதை அவர் வரித்துக் கொண்டிருப்பதில் தனிமனித அனுபவங்களை சமூக அனுபவங்களாகக் கொள்கிற போக்கும் மனமும் தென்படுகிறது. இதுவே அவரை ஒரு சமூக அக்கறை கொண்ட படைப்பாளியாக எப்போதும் காட்டி விடுகிறது.

“என்ன செய்யப் போகிறீர்கள்” என்ற கவிதையில் அவர் மனசாட்சியாய் எழுந்து குடையும் நிகழ்வுகளைச் சொல்லி அவர் கேட்கும் கேள்வியில் அவரின் சார்பை மறுக்காமல் கவிதை எந்தப் பக்கம் நிற்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது.

கற்றுக்கொண்ட கவிதை வித்தைகளை மத்தாப்பு ஒளியில் “என்றுமுள தென்றமிழில்” வெகு கணக்காக புழங்கு சொற்களைக் கொண்டு நடமாடவிடுகிறார். மெல்லிய வாசிப்பிற்கு இடம் தராமல் முகத்தில் அறைந்து சமூக நடப்புகளை வெகு அருகில் கொண்டு வந்து விடுகிறார். கவிதையில் அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் முக்கியம். அதை பல்வேறு கோணங்களில் கவனித்துப் பார்த்திருப்பதை இக்கவிதைகள் காட்டுகின்றன.