book

சாமியாரும் குழந்தையும் சீடையும்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புதுமைப்பித்தன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788184766202
Add to Cart

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தியவர் புதுமைப்பித்தன், ‘சிறுகதை மன்னன்’ என்று புகழ் பெற்ற புதுமைப் பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரில் 1906-&ம் ஆண்டு ஏப்ரல் 25&-ம் தேதி பிறந்தார். புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம்தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமர்சனங்கள் என எழுதி எழுத்தோடு இரண்டறக் கலந்தவர் அவர். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. தனது எழுத்தில் அவர் கையாண்ட விஷயங்களும், கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார். இலக்கியங்கள் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வியலை பிரதிபலிப்பது. அதனால்தான் ‘மகா இலக்கியங்கள், பலவித கோணங்களிலிருந்தும் வாழ்வை நோக்குவதைத் தடைசெய்வதற்காகக் கட்டம் போட்டு மாட்டப்பட்ட படங்கள் அல்ல’ என்ற ஆழமான கருத்தை அவர் முன்வைத்தார். நம் வாழ்வு எப்படிப்பட்டது என்பதை புதுமைப்பித்தனின் எழுத்துக்களை வாசித்தால் தெரிந்துவிடும். வாழ்வின் அர்த்தங்கள் குறித்த நமது மதிப்பீடுகளை நாம் அளவிடுவதை தவிர்த்து எதார்த்தத்தை உணர்ந்தாலே வாழ்வு பூரணமாகும். உயரிய இலக்கிய பணிகளோடு, பத்திரிகைகளில் பணிபுரிந்த புதுமைப்பித்தன் மணிக்கொடி இயக்கம் தொடங்கி தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தியவர். அவரது படைப்புக்களை இலக்கிய சிகரங்கள் வரிசையில் வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமிதம் கொள்கிறது. இளைய தலைமுறை புதுமைப்பித்தனை வாசிக்க வேண்டும் என்பதும் எமது விருப்பம். அடித்தட்டு மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் எழுத்தாக புதுமைப்பித்தனின் படைப்புக்கள் அமைந்திருக்கின்றன. புதுமைப்பித்தன் வாசிப்புக்கு மட்டுமல்ல...