book

பி.சி. ஜோஷி 21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிச சிந்தனையாளர்

P.C.Joshi 21 Aam Nootraandukaana Socialisa Sinthanaiyalargal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீவா
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384646240
Add to Cart

ஜோஷி உன்னதமான தன்மைகள் கொண்ட சிறந்த மனிதர். ஒரு கம்யூனிஸ்ட்டு, ஒரு செயல்வீரர். ஒரு நிர்வாகி, விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கலைநயம் மிக்க கலை விமர்சகர் என அனைத்தும் கலந்த மனிதர் அவர். மிகுந்த கருணையும், கனிவான இதய மும், கூர்ந்த மதியும் கொண்ட மனிதாபிமானி. தாம் சந்தித்துப் பேசும் எவரையும் ஈர்க்கும் வல்லமை படைத்தவர். கட்சித் தோழர்களைச் சகோதரர், சகோதரி போல அன்பும், அக்கறையும், கொண்டு நடத்தும் பண்பால், கட்சித் தோழர்கள் ஒரு குடும்பம் போல உணர்ந்தனர். ஆனால் இதுகூட விமர்சிக்கப்பட்டது. கட்சி என்பது குடும்ப உறவல்ல, புரட்சிகர அணியின் வீரர்கள் என்று விமர்சித்தோரும் உண்டு. தாயன்பு பெற முடியாமல் வளர்ந்த அவர் அத்தகைய அன்பைப் பிறருக்கு வழங்க நினைத்தார். கம்யூனிஸ்ட்டு கட்சி பாசமும், பிணைப்பும் கொண்ட குடும்பமாக வளர்க்கப்பட வேண்டுமென்பதே அவருடைய விருப்பமாக இருந்தது.