book

சித்தர்கள்

Sithargal

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :4
Published on :2013
Add to Cart

சித்தர் பிறந்த தமிழ்நாடு

    எனச் சித்தர்களின் பெருமையைப் பாராட்டுகின்றார் பாரதியார். சித்தர்கள் மரண பயத்தை வென்றவர்கள் ஆவர். இவர்களால் எதையும் சாதிக்க முடியும். நீரினுள் இருப்பர், நெருப்பினுள் அமர்வர், கூடு விட்டுக் கூடு பாய்வர், அந்தரத்தே (வான்வழியே) செல்லக் கூடியவர்கள். சித்தர்கள் யோகத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் புத்தியைக் கட்டுப்படுத்துபவர்கள். ஆன்மிகம் தழைக்கவும், மக்களின் ஆரோக்கியம் செழிக்கவும், சித்தர்கள் முக்கியப் பங்காற்றியவர்கள். அவர்கள் தத்துவ நெறியிலும், மருத்துவத் துறையிலும் மிகுதியான பல நூல்களைச் செய்துள்ளனர். இவர்கள் கடவுள் நிலை பெற்றவர்கள். கடவுளுக்குச் சமமாய்ப் போற்றி வணங்கப்பட்டனர்.

    சித்தர் என்ற சொல் சித்தியில் இருந்து வந்தது. ஆன்மிகத்திலும்,     அறிவியல் சாதனைகளிலும் முழுமையுற்ற நிலைதான் சித்தி. சித்தி பெற்றவர் சித்தர். இவர்களைச் சமய, சமுதாயத்தின் ஆன்மிகப் புரட்சியாளர்கள் என்றும் அறிவியலின் முன்னோடிகள் என்றும் கூறுவர்.