book

ஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா)

Aazhi Peariyathu (Ithu Oru Hinthuththuva Ensaiklopeetiyaa)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரவிந்தன் நீலகண்டன்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர் அரவிந்தன் நீலகண்டன். ஹிந்துத்துவம் குறித்த தவறான பார்வைகளும் புரிதல்களும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுவரும் தமிழ்ச்சூழலில், அரவிந்தனின் எழுத்துகள் நாளைய தலைமுறைக்கான தேவைகள் உணர்ந்து ஒரு மௌனமான தனிநபர்ப் போராட்டத்தை இடைவிடாது மேற்கொண்டு வருபவர். அழுத்தமும் அழகும் தெறிக்கும் அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான, மர்மமான ஆனால் முக்கியமான தருணத்தை விளக்குகிறது. அவைகள்: • வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே. • சோமபானம் என்பது சாராயம் அது ஆரியர்கள் வெற்றி. •திராவிடர்களை கொண்டார்கள். • சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள். • வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது? என இது போன்ற போலி கட்டுமானங்களை உடைப்பதுடன், மேலும் இந்த நூலில்: • வேத காலம் எப்படி இருந்தது? வேத கால முனிவர்களின் சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன? • வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசு கின்றனவா? • வேத பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால், வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் ஃபிஸிக்ஸ் தெரிந்திருந்தது. வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இங்கே இடமில்லை. தமிழ் பேப்பர் இணைய இதழில் தொடராக வெளிவந்தபோது மிகப்பெரும் வரவேற்பையும் அதைவிடப் பெரிய சர்ச்சைகளையும் எதிர் கொண்ட இது, உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் சந்ததிகளுக்குமான ஒரு தீராப் புதையல்.