-
இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இந்த அசாதாரணமான நிகழ்வு எப்படிச் சாத்தியமானது? பிரமிக்க வைக்கும் அரசியல் பின்புலம், அளவற்ற அதிகாரம், ஆள் பலம், பண பலம் அனைத்தும் இருந்தும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வகையாகச் சிக்கிக்கொண்டது எப்படி? நீதிமன்ற சாட்சியங்கள், விசாரணை அறிக்கைகள், வாக்குமூலங்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் எதிர்த்தரப்பினரின் வாதங்கள், பல்வேறு நீதிபதிகளின் தீர்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கின் அனைத்துப் பரிமாணங்களையும் கண்முன் நிறுத்துகிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வர்மீதும் வழக்குப் பதிவான தினம் தொடங்கி அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்த தினம் வரையிலான முக்கிய நிகழ்வுகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு வழக்குகளில் சிக்கிக்கொண்டபோதும் அனைத்தையும் உடைத்தெறிந்த ஜெயலலிதாவால் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து மட்டும் ஏன் மீளமுடியவில்லை என்பதற்கான காரணங்களும் விரிவாகவே இதில் இடம்பெற்றுள்ளன. ஓர் ஊடகவியலாளராக ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை ஆரம்பம் முதல் கவனித்துவரும் கோமல் அன்பரசன், தமிழ் வெகுஜன ஊடகங்களில் வெளிவராத பல தகவல்களையும் விரிவான பின்னணி விவரங்களையும் விறுவிறுப்பான நடையில் இந்தப் புத்தகத்தில் அளித்திருக்கிறார்.
-
இந்த நூல் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, கோமல் அன்பரசன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, கோமல் அன்பரசன், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,கோமல் அன்பரசன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.
|