book

பாப்பாப் பாட்டில் பகவத் கீதை

Paappapaattil Bhagavath Geedhai

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா.வி. ஶ்ரீநிவாஸமூர்த்தி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464443
Add to Cart

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் 1946-ம் ஆண்டு (இராய) வேலூரில் பிறந்தார். வேலூருக்கு வடக்கே (அன்றைய) 18 மைல் தொலைவிலுள்ள (இன்றைய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த) சித்தூரில் (சிற்றூர்) பள்ளிப் படிப்பு: 12-ம் வகுப்புவரை படித்தார். 1962-ம் வருடம், 16 வயதில் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான இவர், 1964-ம் வருடம் சுங்க இலாக்காவில் (அப்போதைய மதராஸில்) எழுத்தராகச் சேர்ந்தார்; பின்னர் படிப்படியாக உயர்ந்து அஸிஸ்டென்ட் கலெக்டரானார்.பணியிலிருந்து கொண்டே மாலைக் கல்லூரியில் படித்துப் பட்டப் படிப்பை முடித்தார் (1965-69) 30 வருட (மத்திய அரசாங்கப்) பணி முடிந்து, 50 வயது நிரம்பிய நிலையில் விருப்ப ஓய்வு பெற்றார்.1995-ம் வருடந் தொடங்கி, தனது பணிக்காலத்தில் அநுபவரீதியாக அடைந்த சுங்கச் சட்ட அறிவைக் கொண்டு பல வியாபார நிறுவனங்களுக்கு (சுங்கச் சட்ட) ஆலோசகராகப் புதிய பணியில் ஈடுபட்டார்: அதையும், 14 வருடங்களுக்குப் பிறகு, 2008-ம் ஆண்டு முடிவில் விட்டுவிட்டார்.1970-ல் எழுதத் தொடங்கிய இவர், சில பத்திரிக்கைகளில் சிறுகதைகள், 'வடிவன்' என்ற புனைபெயரில் எழுதியிருக்கிறார்: இவற்றின் தொகுப்பு (மதுரை) "மீனாட்சி புத்தக நிலையத்தால் 1979-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. சில மரபு, மற்றும் புதுக் கவிதைகளும் புனைந்துள்ளார் இவர். 2009-ம் ஆண்டு தொடக்கத்தில், தான் வெகு நாட்களாகத் தொடராது விட்ட இவரின் இலக்கிய, மற்றும் ஆன்மீகத் தேடல்களின் விளைவே இந்நூல், உங்கள் பார்வைக்கு