book

அருணகிரிநாதர்

Arunagirinadhar

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு.வெ. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :100
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

திருத்தணிகை யாண்டவரது தனிப்பெருந்தொண்டராம் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளது சரித்திரம் கர்ண பரம்பரை யாகப் பல்வேறு வகையாகக் கூறப்பட்டு வருகின்றது. புலவர் பாராணம் பாடிய ஸ்ரீ முருகதாச சுவாமிகள் முதல் பல அடியார்கள் அருணகிரியாரின் சரித்திரத்தைத் தாம் கேட்டவாறும், தமது உள்ளத்தில் இறைவன் இயக்கியவாறும் எழுதியுள்ளார்கள். உண்மைச் சரித்திரம் இதுதான் என்று திடம்பெற உரைக்க இடந்தரவில்லை. கர்ண பரம்பரைச் சேதிகளை அறிய விரும்புவோர் மேற்சொன்ன நூல்களைப் படித்து உணரலாம். இப்பொழுது யான் எழுதியுள்ள இவ் வரலாறு கூடியவரையில் அகச்சான்று, புறச்சான்றுகளைக் கொண்டே சுவாமிகளது சரித்திரத்தைக் கூறுவதாகும். சம்பந்தர், அப்பர், சந்தரர் எனப்படும் மூவர் சரித்திரத்தை எங்ஙனம் தேவாரக் குறிப்புக்களைக் கொண்டு சேக்கிழார் சுவாமிகள் கூறியுள்ள சரோ அங்ஙனமே சுவாமிகளின் திருப்புகழாதிய நூல்களின் குறிப்புக்களைக் கொண்டு அவரது தலயாத்திரையாதிய வரலாற்றை எழுதவேண்டும் என்பது எனது அவா. ஆனால், அச்சேறியுள்ள திருப்புகழ்ப் பாக்கள் எல்லாம் சுவாமிகளது திருவாக்கே என உறுதியுடன் கூறுதற்கு இயலாமையானும், மாயா பாசங்களில் தாம் படாதபோதினும், உலகுக்கு நன்மை பூட்ட வேண்டித் தாம் அத்தகைய பாசங்களிற் பட்டதாகத் தமிழ்ப் புலவர் பெருமக்கள் எடுத்துக் கூறும் பெருவழக்கு உண்மையானும், சிற்சில அகச் சான்றுகளைக் கூடச் சுவாமி களின் வாழ்க்கைச் சான்றாகக் கூறுதற்கு அஞ்சி விடுத்துள்ளேன்.