book

இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப. சரவணன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789351351771
Add to Cart

அகிம்சையை மட்டுமே பயன்படுத்தி இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்திவிடவில்லை. பலவிதமான ஒடுக்குமுறை-யையும் மிருகத்தனமான அடக்குமுறையையும் இந்தியர்கள்மீது ஏவிவிட்ட பிரிட்டிஷாரை எதிர்கொள்ள ஒரு மாபெரும் புரட்சிப் படையை இந்தியா கட்டமைக்கவேண்டியிருந்தது. உயிரைத் துச்சமென மதித்த இந்த மாபெரும் வீரர்களின் குருதி இந்த மண்ணில் பாய்ந்த பிறகுதான் சுதந்தர வேட்கை காட்டுத்தீயாகப் பரவத் தொடங்கியது.

பகத் சிங், வ.உ.சி., கட்டபொம்மன், ஜான்சி ராணி, ஹைதர் அலி, திப்பு சுல்தான், வாஞ்சிநாதன், சுபாஷ் சந்திர போஸ், வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, அழகுமுத்துக்கோன், ஒண்டிவீரன் என்று தேசம் முழுவதிலுமிருந்தும் போராளிகள் திரண்டு வராமல் போயிருந்தால் இந்தியா இன்னும் பல ஆண்டுகளுக்கு அடிமை தேசமாகவே நீடித்திருக்கும்.

இருந்தும் வீரம் செறிந்த இவர்களுடைய வாழ்வையும் அசாதாரணமான பங்களிப்பையும் நாம் அதிகம் நினைவு-கூர்வதில்லை. தமது உயிரைப் பணயம் வைத்து நம் அடிமைச் சங்கிலிகளை அறிந்தெந்த இந்தத் தியாகிகளை நினைவில் வைத்துப் போற்றுவதும் அவர்களை அடுத்தடுத்தத் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதும் நம் கடமை மட்டுமல்ல அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்தபட்ச நன்றிக்கடனும்-கூடத்தான். அதற்கு இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும்.