book

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

Octobus Kavithaigalum Adarntha Kavithuvamum

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ.புண்ணியவான்
பதிப்பகம் :தங்கமீன் பதிப்பகம்
Publisher :Thangameen Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

சமகாலத் தமிழ் இலக்கியத்தோடு தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ளும் தாகமுள்ள மூத்த மலேசியத் தமிழ் இலக்கியவாதிகளுள் கோ.புண்ணியவான் முக்கியமானவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வரும் இவர், புதிய தமிழ்உலகின் திசைகளை இளைய தலைமுறைக்குத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருபவர். இந்த கட்டுரைத் தொகுப்பு, அந்த முனைவின் அடுத்த அடையாளம். கோ.புண்ணியவானின் இந்தக் கட்டுரைகள், நல்ல கவிதைகளை, நவீன கவிதைகளைத் தேடித் தேடி நமக்கு அறிமுகம் செய்கின்றன. தம் வாழ்வில் கண்ட பல்வேறு சம்பவங்களின் ஊடாக இவர், அந்தக் கவிதைகளை நமக்குக் காட்டிச் செல்கிறார். கதைக்கும் கவிதைக்கும் இடைப்பட்டதோர் மொழிநடையில். இவர் செல்லும் எழுத்துப்பயணம் வாசக மனதை இழுத்துப் பிடிப்பதாக இருக்கிறது. ISBN எண்: 978-981-07-5593-5