book

ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்

Oru Payanniyan Porkikaala Kuruppigal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கருணாகரன்
பதிப்பகம் :கருப்புப் பிரதிகள்
Publisher :Karuppu Pradhigal
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :166
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

35 ஆண்டுகளாக எந்த சுகத்தையும் காணாத ஈழ வாழக்கை இரத்த சாட்சியமாய் ஒரு கவிதை நூல். வன்னியின் கொடூர யுத்தத்தில் உயிர் காக்க போராடிய தமிழ் ஜீவன்களின் அவலத்தை, கண்ணீரை, கவிஞர் கருணாகரன் வன்னி போர் முனையிலிருந்து எழுதிய கவிதைகள் கைவிடப்பட்ட மக்களின் ஆன்மாவாக நம்முடன் பேசுகின்றன. நிரந்தரமாக இப்பொழுதும் வன்னியில் வசிக்கும் கருணாகரனே ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் என்று இப்படி ஒரு நூலை எழுத வேண்டியது காலத்தின் நிர்பந்தம். அடிப்படையில் எந்த சுகத்தையும் அந்த மக்கள் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக காணவில்லை என்பதையே புலிகளின் காலத்திலும் மக்கள் சந்தித்த நெருக்கடியை இவர் பதிவாக்கியிருப்பது காட்டுகிறது. இது மனித பேரவலம் இல்லாமல் வேறென்ன? 2007ஆம் ஆண்டுக்கு 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஈழப் போரின் இறுதிக்காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பக்கங்கள் மொத்தம் 53. ஆனால் ஒட்டுமொத்த துயரமும் இதில் வடிக்கப்பட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன இந்தக் கவிதைகள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மனப்பதிவான இந்தக் கவிதைகள் ஈழத்தமிழரின் இரத்த சாட்சியாய் இருக்கின்றன. நன்றி: இந்தியாடுடே, 28/8/2013.