book

கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள்

Therndethutha Kathaigal

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

எனது ஊரையும் எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து . விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுததும் இந்த மண்ணின் மடியில் தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரிப்போட்டுக்கொண்டும், என் கூட்டாளிகளின் தலையில் வாரி இரைத்தும் ஆனந்தப்பட்டிருக்கிறேன். இந்தக் கரிசல் மண்ணை நான் ருசித்துத் தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடிவாங்கியிருக்கிறேன். இன்றைக்கும் எனக்குத் தெவிட்டவில்லை இந்த மண். என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது என்னுடை தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன். கி.ராஜநாராயணன் 'கதவு' சிறுகதை மூலம் தமிழ்ச் சிறுகதை உலகின் கதவை விசாலமாகத் திறந்து வைத்த கி.ராஜநாராயணன் நாவல், சிறுகதை, கடிதங்கள், நாட்டுப்புறப் படைப்புகள், வரலாறு, அகராதி எனத் தமிழில் பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தடம்பதித்து வருகிறார். 1992ம் ஆண்டு 'கோபல்லபுரத்து' மக்கள் நூலுக்காக சாகித்ய அகாதமி விருதுபெற்ற கி.ராவின் மணிவிழாவையொட்டி 'கரிசல் கதைகள்', 'ராஜநாராயணீயம்' போன்ற நூல்களை வெளியிட்ட அன்னம், கி.ரா - 75ன் போது 'கி.ரா. கதைகள்' மொத்தத் தொகுப்பையும், கி.ரா-80 விழாவின் போது 'கி.ரா. கட்டுரைகள்' என்ற மெகா கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டது. தற்போது கி.ரா-85 விழாவில் 'நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்', 'ராஜபவனம்' நூல்களுடன் இந்த 'தேர்ந்தெடுத்த கதைகள்' நூலையும் வெளியிடுகிறது.