book

தூக்கம்

Thookkam

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.என். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684491
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

தூக்கத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?

தூக்கமின்மை பிரச்னை எதனால் ஏற்படுகிறது? அந்தக் குறைபாட்டை எப்படி நிவர்த்தி செய்வது?

குறட்டை விடுவது அபாயகரமானதா? சிகிச்சையால் அதைக் குணப்படுத்த முடியுமா?

கட்டுப்பாடற்ற தூக்கத்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன? அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

ஆரோக்கியமான தூக்கப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?

- இப்படி தூக்கத்தைப் பற்றியும், அதன் தொடர்பான குறைபாடுகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் விளக்கமாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

தூக்கம் என்பது ஒரு மர்மதேசம்; அதன் கதவுகளைத் திறந்து வைத்து பல சுவாரசியங்களை வெளிப்படுத்தும் இந்தப் புத்தகம், படிக்கும் போதே அல்ல, படித்து முடித்தவுடன் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தைத் தருவது நிச்சயம்.நூலாசிரியர் டாக்டர் என். ராமகிருஷ்ணன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவராக உள்ளார். நித்ரா என்ற தூக்கத்துக்கான சிறப்பு மையத்தின் மூலம், தூக்கம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சையும், ஆலோசனையும் அளித்து வருகிறார். ஏற்கெனவே, 'ஐ.சி.யு. - உள்ளே நடப்பது என்ன?' என்ற புத்தகத்தை எழுதியிருக்கும் அவருடைய இரண்டாவது புத்தகம் இது.