book

பாமா விஜயம் திரைக்கதை வசனம்

Pama Vijayam

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இயக்குநர்.கே. பாலசந்தர்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :199
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184760552
குறிச்சொற்கள் :திரைப்படம், பண்பாடு, சமூகம், சரித்திரம், நகைச்சுவை
Add to Cart

தலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் விரிவடையத்தான் செய்கின்றன. ஆனாலும், எந்தச் சூழலிலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படவேண்டும் என்பதை மட்டும் அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடகங்களும் திரைப்படங்களும் பரவலான பாராட்டுதல்களைப் பெற்று வருகின்றன. தாய்ப் பாசம், சகோதர உறவு, தேச ஒருமைப்பாடு, வன்முறைக்கு இடம்தராமல் பாதுகாப்பது, வரவுக்குத் தகுந்த செலவுகள் செய்வது... இதுபோன்ற கருத்துகளை நிலைபெறச் செய்யும் முயற்சிகளில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள், போலி கௌரவத்தை உடைத்து குடும்ப ஒற்றுமையை உயர்த்திக் காண்பித்து, மக்களிடையே பெரும் ஆதரவைத் திரட்டி வெற்றி பெற்ற திரைப்படம்தான் பாமா விஜயம்! தமிழ்த் திரையுலக வரலாற்றில், காலத்தால் அழியாத நகைச்சுவைத் திரைப்படம் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பாமா விஜயம். கருத்தாழம் மிகுந்த கதைக்குப் பொருத்தமான கதா பாத்திரங்களை உருவாக்கி, பொருத்தமான கலைஞர்களை உலாவரச் செய்து திரை உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் கே.பி. ஒவ்வொரு காட்சியிலும் விறுவிறுப்பான நகைச்சுவை வெடிகளைப் பரப்பி, படம் பார்ப்பவர்களை விழுந்துவிழுந்து சிரிக்கவைத்த கே.பி.யின் திறமையை உயரத்தில் தூக்கி வைத்த படம். ஒரு தலைமுறை பார்த்து ரசித்ததை பல தலைமுறைகள் படித்து ரசிக்க, இதோ இந்த பாமா விஜயம் படத்தின் திரைக்கதை&வசனம் காட்சிக்குக் காட்சி புகைப்படங்களுடன், இந்த நூலாக...