-
சந்தேகங்கள் ஏற்படுவது மனித இயல்பு. அப்படி ஏற்படுகிற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்போதுதான் மனித மனம் தெளிவு பெறுகிறது. நிம்மதி அடைகிறது. கேள்வி கேட்கும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் மனிதனுக்கு மட்டுமே உண்டு. தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் பற்றியெல்லாம் மனிதனுக்கு கேள்வி எழுகிறது என்றாலும், ஆன்மிகம் என்று வரும்போது அந்தக் கேள்விகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. உதாரணமாக, உபன்யாசங்களுக்குச் சென்று வீடு திரும்பும்போது மனதில் எழும் சந்தேகங்கள் நிறைய. ஆன்மிகம் மற்றும் வேதாந்தம் தொடர்பான நூல்களைப் படித்துக்கொண்டிருக்கும்போது ஏன்? எப்படி? என்ற கேள்விகள் நம்மைத் துளைத்தெடுக்கின்றன. அவ்வளவு ஏன்? வீட்டில் விசேஷ நாட்களில் பூஜை நடக்கும்போது பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் குறித்துதான் நமக்கு எத்தனை கேள்விகள் தோன்றுகின்றன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு சக்தி விகடன் இதழில் தொடர்ந்து பதிலளித்து வருகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். ஐயம் போக்கும் விதத்தில் அவர் அளித்துவரும் ஆன்மிக பதில்கள் வாசகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. இந்த பதில்களின் தொகுப்பு ஏற்கெனவே ஐயம் போக்கும் ஆன்மிகம் என்ற தலைப்பில் விகடன் பிரசுரமாக வெளியாகி பரவலான பாராட்டுதல்களைப் பெற்றது. இந்த நூல் அதன் இரண்டாம் பாகம்.
-
This book Iyam Pokkum Aanmeegam (part 2) is written by seshadrinath shastrigal and published by Vikatan Prasuram.
இந்த நூல் ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2), சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iyam Pokkum Aanmeegam (part 2), ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 2), சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், seshadrinath shastrigal, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , seshadrinath shastrigal Kelvi-Pathilgal,சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy seshadrinath shastrigal books, buy Vikatan Prasuram books online, buy Iyam Pokkum Aanmeegam (part 2) tamil book.
|