book

1857‍-ல் தமிழ் மண்

1857- il Tamil Mann

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செங்கோட்டை ஸ்ரீராம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :131
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788184760453
குறிச்சொற்கள் :சரித்திரம், தகவல்கள், பிரச்சினை, போராட்டம், விஷயங்கள்
Out of Stock
Add to Alert List

சுதந்திரக் காற்றை சுவாசித்து நாம் சுகமாக வாழ்கிறோம் என்றால், அதற்குக் காரணம் நம் முன்னோர் செய்த தியாகம்தான். நிஜாம் மற்றும் நவாபுகளின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பதவி மோகம், வரி வசூலிப்பதில் உண்டான போட்டி, சுதேச ஆட்சியாளர்களிடையே இருந்த ஒற்றுமையற்ற சூழல் போன்றவை வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு சாதகமாகப் போயிற்று. அதன்பின் இருநூறு ஆண்டுகள் நம் நாடு அடிமைப்பட்டு மக்கள் அளவற்ற துன்பங்களுக்கு ஆளாக நேர்ந்தது. இவை நமக்கு இந்திய வரலாறு கூறும் விஷயங்கள். ஆங்கிலேயருக்கு எதிரான 1857 முதல் சுதந்திரப்போர் சிப்பாய் கலகமே என்றும், இல்லை அது ஒரு தேசிய எழுச்சி என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இவற்றை மையமாகக் கொண்டு, 1857ல் தமிழகத்தில் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியையும், அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்தேவன் என்ற தமிழக பாளையக்காரர் எழுப்பிய முதல் சுதந்திரப் போர்க் குரலையும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களின் செயல்களையும் ஆவணங்களின் குறிப்புகளோடு இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். நவாபுகளுக்குள் உண்டான காழ்ப்பு உணர்ச்சியால், எப்படி நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டது, வாணிபம் செய்ய வந்தவர்கள் நம்மை ஆட்சி செய்ய நேர்ந்தது எப்படி போன்ற பல வரலாற்றுச் செய்திகளை நூலாசிரியர் அழகாகத் தொகுத்துள்ளார். நம் நாட்டின் சுதந்திர வரலாற்றில், சரியாகப் பதிவாகாமல் போய்விட்ட 1857ம் ஆண்டு நிகழ்வுகளில் தமிழகத்தின் பங்கினையும், புதிய பரிமாணத்தோடு சில சம்பவங்களையும் நூலாசிரியர் நம் சிந்தனைக்குக் கொண்டு வந்திருக்கிறார். வரலாற்றுப் பதிவுகளும் அவை சார்ந்த விஷயங்களும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை. இந்த நூல் வரலாற்றுப் பதிவினைத் தெரிவிக்கும் தகவல் பெட்டகமாகவும், வீர உணர்வை வெளிப்படுத்தும் தூண்டுகோலாகவும் அமைந்துள்ளது.