| |||||||||||||||||||||||||||||||||||||||
|
![]() |
|
| |||||||||||||||||||||||||||||||||||||||
|
| |||||
| |||||
தொடர்புடைய புத்தகங்கள் : | |||||
| |||||
ஆசிரியரின் (சி.என்.எஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் : | |||||
| |||||
மற்ற அரசியல் வகை புத்தகங்கள் : | |||||
பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் : | |||||
You must be logged in to post a comment.
Jeeva Puthakalayam |
Information/Help |
Customer Care |
Follow us |
About Us Contact Us Terms and Conditions Tamil books blog Link to Us |
Frequently Asked Questions(FAQ) How to buy tamil books online? Tamil books online shopping - Top sellers Free Tamil E-Books for download Tamil books tags Tamil book news Tamil book Reviews Tamil book Release |
Help Desk: Customercare email : Write to us ccare@noolulagam.com Phone : Call us +91-7667-172-172 Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders Give Feedback |
![]() ![]() ![]() ![]() |
![]() |
![]() |
![]() |
மேலவளவையும், பாப்பாபட்டியையும், கீரிப்பட்டியையும் பார்த்தவர்கள் நாம், ஒரு பஞ்சாயத்துக்குத் தலைவராவதற்கே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ள வெற்றிகரமான இந்திய ஜனநாயகத்தின் குடிமக்கள் நாம். அப்படிப்பட்ட நாட்டில் ஒரு தலித் மாநில முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை. அப்படிப்பட்ட மாயாவதியின் சாதனையையும் வாழ்க்கையையும் கொண்டாடும் விதமாக அவர் வாழ்க்கையை அலசுகிறது கிழக்குப் பதிப்பகத்தின் மாயாவதி: ஒரு வாழ்க்கை என்ற புத்தகம்.
தந்தைபெரியாரின் ஐம்பது அறுபது ஆண்டு காலப் பிரச்சாரமும். அவருடைய வழிவந்த (வந்ததாகச் சொல்லிக் கொள்ளும்) கண்ணீர்த்துளிகளின் நாற்பது ஆண்டுகால ஆட்சியாலும் ஏற்படாத ஒரு மாற்றம் இவைகள், இல்லாத ஒரு மாநிலத்தில் நடந்திருக்கிறது என்றால் அதன் பின்னணியும் சற்று ஆராயப்பட வேண்டியதுதான். அதை இந்த புத்தகம் செய்யாமல் வெறுமனே மாயாவதியின் அரசியல் வளர்ச்சியையும் அவரையும் படம் பிடித்துக்காட்டுகிறது. சுதந்திர இந்திய ஜனநாயகம், இந்திய சுதந்திரத் தலைவர்களும் (அம்பேத்கர், மற்றும் சில தலைவர்கள் தவிர்த்து) தலித்துகளுக்கு வழங்கியதெல்லாம் ஹரிஜன் பட்டமும், கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடும், ஓட்டுரிமையும் (இவையாவும் அம்பேத்கருடைய இடையறாத போராட்டத்தால் பெற்றவை. அதற்கு அவர் பட்ட துயரங்களும், சந்தித்த சவால்களும் தனிவரலாறு.) மற்றபடி தலித்களின் வாழ்க்கைச்சூழல் மேம்பட்டது பிரிட்டீஷாரின் காலத்தில், கிழக்கிந்திய கம்பெணியின் ராணுவம் அவர்களுக்குத் தந்த வாய்ப்பு. அம்பேத்கருடைய தந்தை , இதே மாயாவதியின் பாட்டனார், தலித் உரிமைகளுக்காக முன்னால் நின்ற பலருடைய வம்சமும் பிரிட்டீஷ் ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் தான். இந்திய சாதி இந்துக்கள் மனுவின் மந்திரத்தில் மயங்கி தலித்களுக்கு அரைவயிற்று உணவுடன் வாழமட்டுமே வகை தந்த போது, அவர்களுக்கு மதிப்போடு வாழவும் வகை தந்தது பிரிட்டீஷ் ராணுவம் தான். (அந்த மனுநேசர்களுடன் போராடியே வெளிவந்தவர்கள் தான் ஜோதிராவ் புலே, அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள்.) ஆனால் மாயவதியை இவர்களோடு ஒப்பிட முடியாது. மற்ற தலைவர்கள் தலித்களுக்காக செய்த முன்னேற்ற நடவடிக்கைகளைவிட மாயாவதியின் செயற்பாடுகள் குறைவுதான் இத்தனைக்கும் அவர்களிடம் இல்லாத ஆட்சியதிகாரம் இவரிடம் இருக்கிறது. ஆனால் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப்போல எதைச் செய்தால் அதிகாரம் நம் கைக்கு வரும் என்பதைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறவராக தன்னை மாற்றிகொண்டுவிட்டார்.
அவருடைய பிறந்த இடம், குடும்பச் சூழல், அவர் தந்தையின் ஆணாதிக்கத் தனம் போன்றவற்றை இந்த புத்தகம் சொல்லி, அவர் குடும்பச்சூழலை எவ்வாறு எதிர்கொண்டு வெளிவந்தார், அவர் தந்தையின் மனப்போக்குக்கு மாயவதி தன் செயல்களால் எவ்வாறு பதிலளித்தார் என்றெல்லாம் கூடவே சொல்கிறது. ஆனால் ஆங்காங்கே சில வார்த்தை விளையாட்டுகள் தென்படுகின்றன் (இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா, அல்லது இந்தச் சமூகத்தின் பொதுபுத்தியில் சொல்லப்படும் சில பொய்களின் தாக்கம் நூலாசிரியரையும் பிடித்து ஆட்டுகிறதா என்று தெரியவில்லை.) அது, “மக்கள் ஆதரவு பெற்றவர்கள் யாராக இருந்தாலும், சாதி, மத, இன, மொழி, கலாச்சார அடையாளங்களையும் கடந்து அவர்களுக்கு சம அளவு வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்கிறது இந்திய அரசியல் அமைப்பு. அதற்கு வாழும் உதாரணம், மாயாவதி“. (பக்கம்: 15) இந்த வார்த்தைகள் தான் அவர்கள் முன்னேறிவிட்டார்கள், அவாள்ல நெறைய பேரு கலெக்டரா இருக்காங்க, வக்கீலா இருக்காங்க, அதுவா இருக்காங்க, இதுவா இருக்காங்க, அங்கே பாரு மாயவதி, இங்கே பாரு மீரா குமார், அப்டியே இன்னும் பாரு பாலகிருஷ்னன். என்று இவர்கள் அடுக்குவதெல்லாம், அதே அரசியல் சாசனம் தரும் உரிமையை எப்படியாவது பிடுங்க வேண்டும் எனும் நோக்கில் தான். ஆனால் இவர்கள் கண்களுக்கு அவர்கள் வாழும் ஊரில் உள்ள தலித்களின் நிலை தெரியுமா என்பது சந்தேகம் தான். வேறு மொழி பேசும் ஒரு பெண்/ஆண் தன் வீட்டு மருமகளாக/மருமகனாக வருவதை ஏற்றுகொள்பவர்கள் தன் மொழி பேசும் ஒரு தலித் பெண்ணை/ஆணை தன் வீட்டுக்கு மருமகளாக/மருமகணாக ஏற்று கொள்ள மாட்டார்கள். திருப்பூர் ஸ்ரீப்ரியாவுக்கு நடந்த கதைகள் இன்னமும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. பிறகென்ன முன்னேறிவிட்டார்கள் தூக்கு, ஓட்டு என்ற கூச்சல்களெல்லாம். இடஒதுக்கீடும் அரசியல் சானம் வழங்கிய (அம்பேத்கர் பெற்று தந்த) சலுகைகள் எல்லாம் ஒன்றையும் பிடுங்கவில்லை, ஆனால், இந்த சலுகைகளும் கிடைக்காமல் போயிருந்தால், ஊர் நண்டு சிண்டுகள் கூட இன்றும் வயதான தலித் பெரியவர்களை ஏய்! முனுசாமி, கருப்பசாமி என்று கூப்பிடும் நிலை தான் நிலவும். அவர்கள் கொஞ்சமாவது சுயமரியாதை பெற உதவி செய்தது ஓரளவு உண்மைதான். அப்படியிருந்தும் அந்த பொதுபுத்தியில் சமநிலை நிலவாத போதும் வெறும் ஒரு உதாரணத்தைச் சொல்லியிருப்பது உறுத்துகிறது. அதே சமயம் அரசு ஊழியர்களாக பணி பெற்ற தலித்கள், அலுவலகங்களில் மேல் சாதியினரின் பார்வையில் எப்படி படுகிறார்கள் என்றும், ஒரு தலித், உயர் அதிகாரியாக இருந்தாலும் அவருக்குக் கீழே வேலை செய்யும் உயர்சாதி இந்து பணியாளர்களிடம் அவர்கள் பெறும் ஒத்துழைப்பையும் இந்த புத்தகம் பதிவு செய்கிறது.
மாயாவதியின் பாமரத்தனமான பேச்சும், முரட்டுத்தனமான பேச்சும் அவரை மக்களிடையே கொண்டுபோய் சேர்த்தது. ஹரிஜன் என்று மேடையில் திரும்பதிரும்ப பேசிக்கொண்டேயிருந்த ராஜ் நரேன் என்ற மத்திய அமைச்சரை மேடையிலேயே போட்டு கிழிகிழியென கிழித்த சம்பவம் மாயாவதியை கன்ஷிராமிடம் கொண்டு சேர்த்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் மாயாவதி ஒரு தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருமாறியதையும் புத்தகம் விளக்கிச் சொல்கிறது. அதேபோல கன்ஷிராம், மாயாவதி மீது கொண்டிருந்த நம்பிக்கையையும்(நம்பிக்கையின்மையயும்), மாயாவதி கன்ஷிராம் மீதுவைத்திருந்த மரியாதையையும், அவருடைய அந்திமக்காலத்தில் அவரை தன் வீட்டிலேயே வைத்திருந்து அவரது உறவினர்களை கூட அவரைச் சந்திக்க விடாமல் நடைபெற்ற சர்ச்சைகளை பதிவு செய்யும் போதே, அவரோடு ஒரு குழந்தையைப்போல அவர் உறவாடிய சம்பவங்களையும் பதிவு செய்கிறது. இன்று டாம் ஜெர்ரி போல மோதிக்கொள்ளும் மாயாவதியும் அவருடைய பகையாளிகளான முலாயம் , பாஜக, காங்கிரஸ் எல்லோருடனும் மாயாவதி கூட்டணி வைத்த அவர் வாழ்க்கையின் அத்தியாயங்கள், புத்தகத்தில் அத்தியாயம் அத்தியாயமாக விளக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் அவர் ஆட்சிக்காகவும் அதிகாரத்துக்காகவும் யாருடனும் எந்தவித கொள்ளகைகளையும், கொள்கை வேறுபாடுகளையும் பார்க்காமல் கூட்டணி வைக்கக்கூடியவர். முதல்முறையாக அவர் வைத்த வித்தியாசக் கூட்டணியைப் பற்றி சொல்லும் போது, கட்சியின் பெயரில் “தலித்களுக்கான கட்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களுக்குமான கட்சி” என்ற கோஷத்தைக் கொண்டு வர்ணக்கலப்பை உருவாக்கிவிட்டார் என்று எல்லா பத்திரிக்கைகளும் கொண்டாடிய சம்பவத்தை இந்த புத்தகம் விமர்சிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டத்தில் பார்ப்பனர்களும் தலித்களும் பங்குபெற்றாலும் பார்ப்பனர்கள் தனி குழுவாகவும் தலித்கள் தனி குழுவாகவும் தான் இருக்கிறார்கள், காங்கிரஸில் இருக்கும் கோஷ்டிகளைப் போல தனித்தனி குழுக்களாகத்தான் கூட்டங்களில் பங்கேற்கிறார்கள் என்பதை சொல்லி அவர்களிடையே ஒரு மாயத்திரை விழுந்திருக்கிறது என்று சொல்கிறது 2000 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் மாயத்திரை அது. அதை மாயாவதியால் இப்போதைக்கு கிழித்தெறிய முடியாது, அதை கிழித்தெறியும் முயற்சியிலும் அவர் இறங்க மாட்டார், அது அவருடைய நோக்கமும் அல்ல, அவருக்கு அந்த தொலைநோக்குப் பார்வையும் கிடையாது, அவருடைய இப்போதைய ஒரே நோக்கம் 2014ல் பிரதமர் கனவு தான். அந்தக் கனவை நிறைவேற்றிக்கொள்ள அவர் எந்த விதமான வித்தியாசக் கூட்டணிகளையும் அமைப்பார்.
நன்றி : http://thamiziniyan.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/