-
துன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது பிடிக்காமல் விரக்தி நிலைக்குப் போகிறது மனித மனம். ஆனால் அந்தத் துன்பத்தையும் எதிர்கொள்ள மனதைத் தயார் செய்து வைத்திருந்தால், அந்தத் துன்பத்தால் எந்த மோசமான விளைவுகளையும் ஏற்படுத்த முடியாது என்பது ஆன்மிக குருமார்கள் சொல்லும் அறிவுரை. வாழ்க்கையின் முன்னேற்றம் என்பது, எதையும் சாதிக்கும் வல்லமையை, ஞானத்தை மனதுக்குக் கொடுப்பதுதான். இந்த வல்லமையின் மூலமே, வாழ்க்கையின் வெற்றி சாத்தியமாகிறது. இந்த வெற்றியைப் பெற நாம் மனதை எவ்வளவு தூரம் நம்பிக்கை மிக்கதாக ஆக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை இந்த நூலைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். ஆன்மிக வாழ்வுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்வுக்கும் உகந்த கருத்துகளை நூலாசிரியர் ஸ்வாமி இந்த நூலில் முன்வைக்கிறார். உடலையும் உள்ளத்தையும் தெம்பாக வைத்திருக்க, பிராணாயாமம், உடல்பயிற்சிகள், யோகப் பயிற்சிகள், மனப் பயிற்சிகள் என்று நுட்பமான விஷயங்களையும் அழகாகத் தந்திருக்கிறார். உள்ளமே எல்லாவற்றுக்கும் அடிப்படை. அந்த உள்ளத்தை தூய்மையாகவும் வலுவாகவும் வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஆலோசனைகளை நூலாசிரியர் தெளிவாகத் தந்திருக்கிறார். மனிதனின் மன முன்னேற்றத்துக்காக திருக்குறள் கூறும் கருத்துகளும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன. தான் கறுப்பு, தன்னிடம் பணமில்லை, புகழ் இல்லை என்று ஏக்கத்தால் துவண்டு கிடக்கும் உள்ளத்துக்கு அருமருந்தாக, மனதைத் தேற்றி, சுயமுன்னேற்ற சிந்தையை விதைக்கிறது நூலாசிரியர் தரும் ஆலோசனைகள்.
-
This book Yoga Manothathuva Kalai is written by Swami and published by Vikatan Prasuram.
இந்த நூல் யோக மனோதத்துவக் கலை, ஸ்வாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yoga Manothathuva Kalai, யோக மனோதத்துவக் கலை, ஸ்வாமி, Swami, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Swami Suya Munnetram,ஸ்வாமி சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Swami books, buy Vikatan Prasuram books online, buy Yoga Manothathuva Kalai tamil book.
|