book

சிரிக்க சிந்திக்க பரமார்த்த குரு கதைகள்

Sirikka Sindhikka Paramartha Guru Kadhaigal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இறையடியான்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

சிரிக்க சிந்திக்க பரமார்த்த குரு கதைகள் - வீரமாமுனிவரும், தமிழும்! ஒரு முன்னூறு, நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது பாரத நாட்டில் கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்காக மேலைநாட்டு பாதிரியார் பலர் இங்கே வந்தனர். பாரத நாட்டு மக்களை மனமாற்றம் செய்து கிறித்துவர்களாக்கும் நோக்கத்தோடு இங்கே வந்து பாதிரியார்கள் பலர் தாங்களே மனமாற்றம் அடையப் பெற்றுப் பாரத நாட்டின் மதம் - கலை - கலாச்சாரங்களில் மனத்தைப் பறி கொடுத்து மனமாற்றம் பெற்றது உண்டு. சில அயல்நட்டுப் பாதிரிகள் தங்கள் தாய்மொழியைப் பாரத மக்களிடம் பரப்பி, அதன் மூலம் செல்வாக்குப் பெற நினைத்தார்கள். ஆனால், அவர்கள் பாரத மொழிகள் சிலவற்றில் மனத்தைப் பறிகொடுத்து, அம்மொழிகளைக் கற்றுத் தேர்ந்து அந்த மொழிகளிலேயே மனம் லயித்துப் போனவர்கள் உண்டு.