book

இதயத்தைத் திருடிய தேவதையே

Idhayaththai Thirudiya Devadhaiye

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மகேஸ்வரி
பதிப்பகம் :இராமு நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

அம்மா சுமதிக்குப் பயங்கர ஜலதோஷம்! அதனால், புனிதா தாயை வீட்டில் இருக்கச் சொல்லி விட்டுத் தனியே கிளம்பி விட்டாள். 'இன்று போகவில்லையம்மா!' என்று புனிதா சொன்னால்... சுமதி விடவேமாட்டாள். காரணம்...? புனிதாவின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதில்... சுமதிக்குப் பெரும் வருத்தம்! நான்கு கோயில் குளத்திற்குச் சென்றாலாவது... அந்த இறைவனின் அருளால்... அவளுக்குத் திருமண யோகம் வரும் என்ற பயங்கர நம்பிக்கை, சுமதிக்கு! செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி என்று ஒரு நல்ல நாளையும் விடமாட்டாள், சுமதி. வேலைமெனக் கெட்டு மகளை அழைத்துக் கொண்டு கடவுளைத் தரிசிக்கச் சென்று விடுவாள்.