-
எதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலமாகக் கனவு கண்டால் எப்படி இருக்கும்? மாதச் சம்பளம். வருடாந்திர சம்பள உயர்வு. சொந்த வீடு. ஒரு கார். இவை சராசரிக் கனவுகள். அட்டகாசமாக ஒரு பிசினஸ் பிளான். செயல்படுத்த சொந்தமாக ஒரு நிறுவனம். சொல்வதைச் செய்து முடிக்க ஒரு டீம். புதிய ஐடியாக்களை முனைப்புடன் முயன்று பார்க்கவேண்டும். புதிய வாசல்களைத் திறக்கவேண்டும். மேலே, இன்னும் மேலே என்று வளரவேண்டும். நான். என் நிறுவனம். என் குடும்பம். என் டீம். என் சமூகம்.
ரிஸ்க்கான கனவுதான். சந்தேகம் இல்லை. ஆனால் சாதித்து முடித்துவிட்டால், உங்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ஆட்டத்துக்கு நீங்கள் தயாரா? முதலீடு, பின்னணி எது பற்றியும் கவலைப்படவேண்டாம். குவியும் போட்டியாளர்கள் குறித்து அச்சம் கொள்ளவேண்டாம். எந்தத் துறை, எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று குழம்பித்தவிக்கவேண்டாம். அடிப்படையில் இருந்து தொடங்கி படிப்படியாக, ஒரு பிசினஸ் பிளானை உங்களுக்காக வடிவமைத்துக்கொடுக்கிறது இந்நூல். வெற்றிகரமான ஒரு தொழிலதிபராக உங்களை உருமாற்றுவதற்குத் தேவைப்படும் அத்தனை வழிமுறைகளையும் உள்ளடக்கிய ப்ளூப்ரிண்ட் இது.
-
This book Thozhil Munaivor Kaiyedu is written by S.L.V.Moorthy and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் தொழில் முனைவோர் கையேடு, எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thozhil Munaivor Kaiyedu, தொழில் முனைவோர் கையேடு, எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Varthagam, வர்த்தகம் , S.L.V.Moorthy Varthagam,எஸ்.எல்.வி. மூர்த்தி வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S.L.V.Moorthy books, buy Kizhakku Pathippagam books online, buy Thozhil Munaivor Kaiyedu tamil book.
|
நீங்கள் தொழில் தொடங்க நினைத்தால், நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது!