-
ஒரு சிறிய பயிற்சி. உங்களுக்குத் தெரிந்த மூன்று குளியல் சோப்புகளின் பெயர்களை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். மூன்று டிவி பிராண்டுகள்? சாக்லேட்? சட்டை? கம்ப்யூட்டர்? யோசித்துப் பாருங்கள். சந்தையில் வகைவகையான சரக்குகள் கொட்டிக்கிடக்கின்றன. குண்டூசி முதல் கம்ப்யூட்டர் வரை. ஆனால் சில குறிப்பிட்ட பிராண்டுகள் மட்டுமே நம் மனத்தில் நிற்கின்றன. அவற்றை மட்டுமே நாம் தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறோம்; பரிந்துரைக்கிறோம். அல்லது, இப்படியும் சொல்லலாம். சரியான முறையில் பிரபலப்படுத்தப்படும் பொருள்கள் மட்டுமே வெற்றியடைகின்றன.
விளம்பர உலகின் சூட்சுமம் இதுதான். விற்பனை ரீதியில் இன்று கொடிகட்டிப் பறக்கும் பிராண்டுகள் அனைத்துமே தங்களை முனைப்புடன் விளம்பரப்படுத்திக்கொள்பவை. நான்தான் நம்பர் 1, எனக்கு இனி விளம்பரம் வேண்டாம் என்று சொல்பவர்கள் யாரும் இல்லை இங்கே. பெருகி வரும் போட்டியாளர்களைச் சமாளித்து, தொடர்ந்து உச்சத்தில் நிலைத்து நிற்க விளம்பரம் அவசியம். விளம்பர உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே வர்த்தக உலகில் நம்பர் 1 ஆக மலர முடியும். விளம்பர உலகின் அத்தனைக் கதவுகளையும் திறந்து வைக்கும் இந்தப் புத்தகம், எப்படி விளம்பரம் செய்தால் தங்க மழை கொட்டும் என்பதையும் சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொடுக்கிறது.
-
This book Sundi Izhukkum Vilambara Ulagam is written by and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம், யுவகிருஷ்ணா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sundi Izhukkum Vilambara Ulagam, சுண்டி இழுக்கும் விளம்பர உலகம், யுவகிருஷ்ணா, , Varthagam, வர்த்தகம் , Varthagam,யுவகிருஷ்ணா வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Sundi Izhukkum Vilambara Ulagam tamil book.
|
இப்புத்தகம
பதிவர்கள் மத்தியில் பிரபலமான லக்கிலுக் எழுதிய முதல் நூல் இது. ( உண்மையான பெயர் ‘யுவகிருஷ்ணா’ )
சினிமாவில் நடிக்க நினைப்பவர்கள் விளம்பர துறை ‘பை பாஸ்’ வழி என்றாகி விட்டது. யார் வேண்டுமானும் சினிமாவில் நடிப்பது போல் விளம்பரத்தில் நடிக்க முடியாது. நல்ல அழகு , உடல் தோற்றம், கான்ஸப்ட் தகுந்த வயது என்று பல விஷயங்களை பற்றி யோசிக்க வேண்டும். இருபது நோடியில் கவர்வது போல் கதை தயார் செய்து, மக்கள் விரும்புவது போல் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் மாதக்கணக்கில் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பல பேர் உடல் வருத்தி உழைத்த விளம்பரத்திற்கு உண்மையான வெற்றி அவர்கள் விளம்பரப்படுத்திய பொருளின் விற்பனையில் தான் இருக்கிறது. இரண்டே கால் மணி நேர சினிமா எடுப்பதைவிட, இருபது நொடி விளம்பரம் எடுப்பது மிகவும் கடினம் என்பதை முதல் அத்தியாத்திலேயே நமக்கு சொல்லிவிடுகிறார்.
இரண்டாவது அத்தியாயத்தில் விளம்பரம் உலகில் தோன்றிய வரலாறும், முன்றாவது அத்தியாயத்தில் இந்தியாவில் விளம்பரம் தோன்றிய வரலாறும் எழுதியிருக்கிறார். வரலாறு பிடிக்காதவர்களுக்கு கொஞ்சம் அலுப்பு தட்டும். ஆனால், விளம்பரத்தை பற்றி படிக்கும் போது அது உருவான தகவலை தெரிந்துக் கொள்வதில் தவற ஒன்றுமில்லை.
பின் வரும் அத்தியாயங்களின் ஒரு விளம்பர நிறுவனம் ஒரு விளம்பரத்தை எப்படி அனுக வேண்டும், க்ளைட் தேவை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்று எல்லா தகவல்களை எளிய நடையில் சொல்லியிருக்கிறார்.
இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். ஒரு இடத்தில், விளம்பரத்துறையில் ஐந்து வருடம் அனுபவம் உள்ளவர்கள் கூட சொந்தமாக விளம்பர நிறுவனம் தொடங்கலாம் என்று குறிப்பிட்டுயிருந்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு எனக்கு இது தெரிந்திருந்தால் நானும் விளம்பர உலகில் நுழைந்திருப்பேன். ( ஐ.டி துறையில் நுழைந்தவர்கள் பல வருடங்கள் அனுபவம் இருந்தாலும் ஐ.டி நிறுவனத்தை அவ்வளவு எளிதில் தொடங்க முடியாது.)
ரொம்பவும் ரசித்த அத்தியாயம் என்றால் ‘இருபதாவது’ அத்தியாயமான ‘எதிர்காலம்’ என்ற அத்தியாயம் தான். விளம்பர துறை எப்படி இயங்குகிறது, என்ன செய்ய வேண்டும் என்று சொன்னதோடு இல்லாமல் எதிர்காலம் விளம்பரங்கள் எப்படி இருக்க போகிறது என்பதை சொல்லியிருக்கிறார். தொலைக்காட்சியில் விளம்பர தோன்றும் போதே விரும்பமுள்ளவர்கள் கம்ப்யூட்டரில் கிளிக் செய்து வாங்குவது போல் பொருட்கள் வாங்கும் காலம் வரலாம் என்கிறார். இதனால், கூட்ட நெரிசல்கள் சென்று ஷாப்பிங் செய்ய வேண்டியதில்லை என்பதை ரசிக்கும் படி சொல்லியிருக்கிறார். என்.எஸ்.கேவின் ‘விஞ்ஞானத்த வளர்க்க போரேன்டி’ பாட்டில் சொல்லும் விஷயங்கள் போல் இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டுகிறார். நிச்சயமாக இப்படி ஒரு வளர்ச்சி விளம்பர துறை அடையும் என்பது எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இவ்வளவு நாள் தேவையில்லாத பல மொக்கை பதிவுகளால் லக்கிலுக் தன் நேரத்தை வீண்ணடித்திருக்கிறார். எழுத்துலகில் அவரை கொண்டு வந்த பா.ராவுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லியாக வேண்டும்.
லக்கிலுக்கு இப்படி ஒரு முகம் இருப்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. மேலும் இது போல பல படைப்புகள் படைக்க வேண்டும் பதிவு வாசகர்களாக நாம் வாழ்த்துவோம். (‘யுவகிருஷ்ணா’ என்பதை விட ‘லக்கிலுக்’ தான் நன்றாக இருக்கிறது. இந்த பெயரிலே அடுத்த நூல் வெளியிடுங்கள்.)
நன்றி : http://tamilbookreview.blogspot.com/2009/01/blog-post_1520.html