book

கொங்கு நாட்டு வரலாறு

Kongu naattu varalaru

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் குழந்தை
பதிப்பகம் :தமிழ்மண் பதிப்பகம்
Publisher :Tamilmann Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :296
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

நம் செந்தமிழ் நாடு, சேர சோழ பாண்டிய நாடுகளைப் போலவே தொண்டை நாடு கொங்கு நாடு என்ற இரண்டு தனிப் பிரிவுகளை பழங்காலத்தில் தன்னகத்தே கொண்டிருந்தது.கொங்கு நாடு தனக்கென்று எப்பொழுதும் தனியான எல்லைகள், வரலாறு, கலை, பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், ஆகியவைகளைக் கொண்டது. இதனைப் பழங்கால இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன. நீலகிரி, கோவை, பெரியார், கரூர், சேலம், தருமபிரி மாவட்டங்களில் சில பகுதிகளும், திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளும் கொங்கு நாடாகும்.“ வடக்கே பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பெருப்புவெள்ளிக் கன்று – கிடக்கும்
களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாடு
குளித்தண் டலையளவும் கொங்கு”-என்பது தனிப்பாடல், கொங்கு நாட்டு எல்லை கூறும் எல்லாப் பாடல்களுமே வெள்ளியங்கிரி மலையை மேற்கு எல்லையாகக் கூறுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு தெற்கே சேரநாடு என்பது இதன் கருத்தாகும்.அதனால் தான் தொண்டை நாடு, கொங்கு நாடு ஆகியவைகளைச் சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து என்ற கருத்து முன்பே இருந்தது, தண்டியலங்காரம் என்னும் நூலின் மிகப் பழமையான மேற்கோள் பாடல் ஒன்று,“வியன் தமிழ்நாடு ஐந்து”-என்று கூறுகிறது. சைவ சமய நூல்களில் மிகத் தொன்மையானதாகக் கருதப்படுகின்ற திருமந்திரம்.