book

பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல்

Pervez Musharraf

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183685863
குறிச்சொற்கள் :சரித்திரம், பிரச்சினை, போர், புரட்சி
Out of Stock
Add to Alert List

பாகிஸ்தானில் வருடம் முழுதும் உள்நாட்டு யுத்தம், கலவரம், தீ-வைப்பு, கலாட்டாக்கள். அனைத்துக்கும் காரணம் அதிபர் முஷரஃப்தான் என்கிறார்கள் மக்கள். ராணுவப் புரட்சியின் மூலம் அதிரடியாக ஆட்சிக்கு வந்தவரால் உள்நாட்டுப் புரட்சிகளை ஏன் ஒன்றும் செய்யமுடியவில்லை?

1999ல் நவாஸ் ஷெரீஃபை நகர்த்திவிட்டு முஷரஃப் ஆட்சிக்கு வந்தபோது பாகிஸ்தான் மக்கள் சந்தோஷமாகவே அவரை வரவேற்றார்கள். ஆனால் மிக விரைவில் அந்த சந்தோஷம் வெறுப்பின் உச்சமாக மாறிப்போனது.

ஆப்கனிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பின்போது ஜார்ஜ் புஷ்ஷின் ஆதரவாளராக அவர் நின்றதில் தொடங்குகிறது இந்த வன்மம். பாகிஸ்தான் அடிப்படைவாதிகளால் முஷரஃபின் எந்த ஒரு முற்போக்கு முயற்சியையும் சகிக்கமுடியவில்லை. அவரை ஒழித்துக்கட்டிவிட ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆட்சியில் நிலைப்பதற்காக முஷரஃபும் ஏராளமான தகிடுதத்தங்கள் செய்யவேண்டியதானது. அவரது இமேஜ் விழத்தொடங்கியது அந்தக் கணத்திலிருந்துதான். அதனாலேயே அவர் உருப்படியாகச் செய்த பல நல்ல காரியங்கள் அடையாளமில்லாமல் போயின. 2007ம் வருடத் தொடக்கத்திலிருந்து முஷரஃபை முன்வைத்து பாகிஸ்தானில் நிகழ்ந்த பல சம்பவங்கள் அத்தேசத்தின் சரித்திரத்தை ரத்தப் பக்கங்களால் நிரப்புபவை. வாஜிரிஸ்தான் போர்களும் லால் மசூதித் தாக்குதலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி நீக்கத்தை அடுத்து நடைபெற்ற ஏராளமான கலவரங்களும் இன்னபிறவும் நெஞ்சு பதைக்கச் செய்பவை.

தனது நினைவுத்தொகுப்பு நூலான 'In the Line of Fire'ல் முஷரஃப் சொல்லாமல் விடுத்த விஷயங்களையும் 'மாற்றி'ச் சொன்ன விஷயங்களையும் இந்த நூலை வைத்து நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முஷரஃபின் முழுமையான அரசியல் வாழ்க்கை வரலாறு இது.