-
'அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்'' 'அடப்பாவி மகனே! இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்! இந்தத் தொழில் என்னோட போகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏதாவது ஒரு ஃபேக்டரியில சேர்ந்து மாசம் முவாயிரம் ரூபா நீ சம்பாதிச்சாகூட போதும்பா. விவசாயத்தை நம்பி இனியும் பொழைக்க முடியாதுப்பா'' இதுதான் இன்றைக்கு ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் நாம் கேட்கும் டயலாக். வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற கதையாகத்தான் ஆகிவிட்டது இன்றைய விவசாயம். விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவு எக்கச்சக்கம். இவ்வளவு கஷ்டப்பட்டு உற்பத்தி செய்தும் விளைபொருள்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. தவிர, செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அளவுக்கதிகமாகப் பயன்படுத்தியதால் நலகம் பாழாகிறது.
இதற்கெல்லாம் என்ன தீர்வு? செலவில்லாமல் விவசாயம் செய்ய முடியுமா? லாபம் சம்பாதிக்க முடியுமா?
முடியும். பல்லாயிரம் வருடப் பழைமையான நம் விவசாயமுறைகளையும் தொழில்நுட்பங்களையும் தவறவிட்டதன் விளைவுதான், நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் என்று ஆதாரபூர்வமாக அடித்துச் சொல்கிறார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். விவசாயத்தில் மீண்டும் லாபம் சம்பாதிக்கும் அத்தனை வழிகளையும் சொல்லித் தருகிறார்.
இந்தப் புத்தகம் விவசாயம் பற்றி உங்களுக்கு இருக்கும் பல தவறான அபிப்ராயங்களை மாற்றும். புதிய தரிசனத்தைக் கொடுக்கும்.
-
This book Kalai Edu! is written by Nammalvar and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் களை எடு, நம்மாழ்வார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalai Edu!, களை எடு, நம்மாழ்வார், Nammalvar, Vivasayam, விவசாயம் , Nammalvar Vivasayam,நம்மாழ்வார் விவசாயம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Nammalvar books, buy Kizhakku Pathippagam books online, buy Kalai Edu! tamil book.
|