-
கடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர். கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை; கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளானவை. அடிப்படையில் சுதந்தர தாகம் அவருக்கு இருந்தது. காந்திக்கு அது ஒரு பாதையைக் காட்டியதுபோல், பகத் சிங்குக்கு வேறொரு பாதையைக் காட்டியது.
மிகவும் குறுகிய வாழ்க்கைக் காலம் அவருடையது. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய வலிமையான பாடங்களைச் சுமந்து நிற்கும் வாழ்க்கை. சரித்திரத்தின் ஓட்டத்தோடு அடித்துச்செல்லப்படாமல் சரித்திரத்தையே திருத்தி எழுதிய சூறாவளி வாழ்க்கை. அவரது முறுக்கு மீசையைப் போலவே கம்பீரத்துடனும் துடிதுடிப்புடன் இருக்கிறது அவர் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும்.
முதலாளித்துவத்துக்கு எதிராக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக பகத் சிங் நிகழ்த்திய யுத்தம், அசாத்தியமானது, அபாரமானது.
துப்பாக்கி சுமந்தவராக மட்டுமே பகத் சிங் இன்று அறியப்படுவது வேதனையானது. மாபெரும் கனவுகளை, வீரியமிக்க சிந்தனைகளை, தெளிவான எதிர்காலத் திட்டத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் நெஞ்சோடு சுமந்து திரிந்தவர் பகத் சிங்.
வாழ்வதன் மூலம் மட்டுமல்ல; இறப்பதன் மூலமும்கூட ஒரு சகாப்தத்தை உருவாக்க முடியும். பகத் சிங் ஓர் உதாரணம்.
பகத் சிங்கைப் பற்றிய மிகத் தெளிவான மதிப்பீட்டை முன்வைக்கும் இந்நூலாசிரியர் முத்துராமன். அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் சேர்த்தே விவரிக்கிறார்.
-
This book Bhagat Singh: Thuppakki Vidu Thoothu is written by and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் பகத் சிங், ஆர். முத்துராமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bhagat Singh: Thuppakki Vidu Thoothu, பகத் சிங், ஆர். முத்துராமன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,ஆர். முத்துராமன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Bhagat Singh: Thuppakki Vidu Thoothu tamil book.
|
இந்தியா சுதந்திரம் என்பது நமக்கு ஒரு தனி இயக்கம் சார்ந்த கட்டுரையாக நமக்கு போதிக்க பட்டுள்ளது.
நம் சுதந்திரம் என்பது பல தேசியவாதிகளின் தியாகத்தாலும், ரத்தத்திலும், உழைப்பாலும் பெறப்பட்டது. அதற்கு சிறந்த எடுத்துக்கட்டாய் இந்த புத்தகம் உள்ளது.
ஒரு புரட்சியாளன் எவ்வாறு உருவாகிறான்,
தேச விடுதலைக்கு அவனது பங்கு எத்தகையது,
தன்னுயிர் நீர்ப்பினும் தேச விடுதலை அடைய வேண்டும் என்ற அவன் கொள்கை,
கடைசி நிமிடம் வரை அவன் கொள்கையில் உறுதி,
என்று புரட்சியாளன் பகத்சிங் அவர்களது வாழ்க்கை வரலாறு நமக்கு தெளிவாய் விளக்குகிறது.
பதுகேஷ்வர் தத், பகத்சிங் நடத்திய மத்திய சட்டமன்ற குண்டுவீச்சு,
இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வாழ்க), ஏகாத்திபத்தியம் ஒழிக,
என்ற அவர்களது முழக்கம் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாய் அமைந்தது.
இந்துஸ்தான் சோசிலிசக் குடியரசு அமைப்பில் சந்ரசேகர ஆசாத்,சுக்தேவ்,பதுகேஷ்வர் தத்,பகவதி சரன், ராஜ்குரு என்று பல தேசியவாதிகள் தங்கள் உயிரை பணயம் வைத்து சுதந்திரத்திற்க்காக போராடிய வரலாற்றை இந்த புத்தகத்தின் மூலம் நாம் அறியும் வாய்ப்பை நமக்கு அளித்துள்ளார் நூலின் ஆசிரியர் ஆர். முத்துராமன்.
—வினோத்