book

ETA - ஓர் அறிமுகம்

E.T.A:Oor Arimugam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684163
குறிச்சொற்கள் :சரித்திரம், பிரச்சினை, போர், புரட்சி
Out of Stock
Add to Alert List

1959லிருந்து இன்றுவரை தண்ணிகாட்டிக்கொண்டிருக்கிற ஒரு போராளி இயக்கம் E.T.A. மத்தியக் கிழக்குக்கு ஒரு அல் காயிதா என்றால் ஐரோப்பாவுக்கு இது.

ஸ்பெயினைச் சேர்ந்த இந்த இயக்கம் போராடுவது சுதந்த ரத்துக்காக. ஸ்பெயினின் தன்னாட்சிப் பிராந்தியங்களில் ஒன்றான 'பாஸ்க்'கைத் தனி தேசமாக்கும் கனவு. ஒரு நாள், ஒரு வருடப் போராட்டமல்ல. நாற்பத்தி எட்டு ஆண்டுகளாக நீளும் பெரும் யுத்தம் அது. சுமார் ஆயிரம் படுகொலைகள், நூற்றுக் கணக்கான குண்டுவெடிப்புச் சம்பவங்கள், கணக்கு வழக்கே இல்லாத ஆள் கடத்தல்கள்.

தீவிர இடதுசாரி இயக்கமான ஈ.டி.ஏ. இன்றைய தேதியில் ஐரோப்பாவின் மாபெரும் தலைவலி. உலகம் முழுதும் மிக வலுவான நெட் ஒர்க். அசாத்தியமான பணம் மற்றும் ஆள் பலம். ஸ்பானிஷ் அரசு ஆண்டுக்கணக்கில் குட்டிக்கரணம் அடித்துப் பார்த்தும் இவர்களது சுண்டுவிரலைக்கூட அசைக் முடியவில்லை. ஏன்?

குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பா.ராகவன் எழுதிவரும் சர்வதேசத் தீவிரவாத இயக்கங்கள் குறித்த 'மாயவலை' தொடரில் இடம்பெற்று, பரபரப்பான வரவேற்பைப் பெற்றது இது.