book

ஹோ சி மின் ஒரு போராளியின் கதை

Ho Chi Minh

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683975
Out of Stock
Add to Alert List

கிழிந்த ரப்பர் செருப்பு. நைந்துபோன மேல்கோட்டு. இடுங்கிய கண்கள். ஒடிசலான உருவம். ஹோ சி மின்னுக்கு இன்னொரு அடையாளமும் உண்டு. விடுதலை வேட்கை மிக்க தீவிரமான போராளி.

அடிமைகளாக இருப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்று வியட்நாமிய மக்கள் ஒடுங்கிக்கிடந்த காலகட்டம் அது. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் திரண்டு நிற்கும் அளவுக்கு தீரமோ திராணியோ வேகமோ விவேகமோ இல்லை அவர்களிடம்.

ஹோ சி மின் தலைமையில் வியட்நாம் முதல் முறையாக ஒரே தேசமாக எழுந்து நின்றது. உக்கிரமாகப் போராடியது. வியட்நாம் சரித்திரத்தில் ரத்தத்தால் எழுதப்பட்ட பாகம் அது. மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். புரட்சியாளர்கள், கம்யூனிஸ்ட்டுகள் சிறையிலடைக்கப்பட்டனர். ஹோ சி மின்னுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து போராடினார் ஹோ சி மின். விளைவு? சுதந்தரம் என்கிற மகத்தான சந்தோஷம்.

மக்கள் நலனுக்காகப் பாடுபடுவதைவிட அழகுமிக்கதும் அற்புதமானதும் வேறு இல்லை என்பதை நிரூபித்துக்காட்டிய மனிதாபிமானியின் உணர்ச்சிபூர்வமான கதை இது.

 

Torn rubber slippers, worn-out over coat, eyes gone in and an emacited figure �?? that awas Ho Chi Min. But he had another dimension also. He was a serious rebel with thirst for freedom. It was a period in which the Vietnamese thought that there was no other way to live but to be slaves. They were neither courageous nor wise enough to stand united against French imperialism. But under the leadership of Ho Chi Min Vietnam stood as one country for the first time in history and fought vigorously. It was a chapter written with blood in the history of Vietnam. Millions were massacred. All the rebels and communists were imprisoned. Ho Chi Min was sentenced to death. But he fought without losing heart. The result? Liberty, yes the bliss of liberty for the country! It is a humanitarian and emotional story which showed the world that there is nothing more beautiful and wonderful than fighting for the good of the people.