book

மகாபாரதக் கதைகள்

Mahabharatha Kathaigal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தராசன்
பதிப்பகம் :சபரீஷ் பாரதி
Publisher :Sabarish Bharathi
புத்தக வகை :பக்திநூல்கள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Add to Cart

பாரதத்தின் பழம்பெரும் காப்பியங்களுள் மிகப் பெரும் நீதிக் கதைகள் நிறைந்துள்ளன. அறத்தின் மாட்சியினையும் மறத்தின் வீழ்ச்சியினையும் மானிடருக்கு வாழ்வியல் பாடங்களாகப் போதிக்கும் கதைகளைச் சிறுவர் முதல் பெரியோர் வரை அறிந்து கொள்வது சிறந்தது. பல்லாயிரம் ஆண்டுகளாகச் சிரஞ்சீவித் தன்மையோடு வாழ்ந்து வரும் பாரதக் கதைகள், பங்காளிகளுக்குள் பகைமை கூடாது; வஞ்சனை யாகப் பிறர் உரிமைகளைப் பறித்தல் கூடாது, பெண் குலத்தை அவமதித்தல் கூடாது போன்ற பல கூடாத பண்புகளையும், உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக உயிராகப் போற்றிக் கொள்ளவேண்டும். ஆண்மை யினையும், ஆற்றலினையும் ஆக்கத்திற்கே பயன்படுத்த வேண்டும். என்பது போன்ற நல்ல பண்புகளை விளக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டு மக்கள் உள்ளத்தைப் பயன்படுத்தக் கூடியனவாக விளங்குகின்றன. நமக்குப் பாடங்களாக அமையும் பழங்க கதைகளை அனைவரும் இனிய எளிய தமிழில் அறிந்து பயனடையும் பெரு நோக்கில் படைத்துள்ளேன். இச்சிறு நூலை ஏற்றுப் எல்லாரையும் வேண்டுகிறேன். பயனடையுமாறு இதனை அழகும் அமைப்பும் பொருந்த வெளியிடும் பதிப்பாசிரியர், நண்பர் திரு. சேது சொக்கலிங்கம் அவர்கள் போற்றலுக்கும் என் நன்றிக்கும் உரியவர் ஆவார்.