book

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 4

Bhagavat Geethai Oru Dharisanam (Part-4)

₹600
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :அதீத பப்ளிகேஷன்ஸ்
Publisher :Atheetha Publications
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :752
பதிப்பு :1
ISBN :9789388450317
Out of Stock
Add to Alert List

கீதை தனித்ததொருவிசேஷம் கொண்டது. சத்தியத்தை அடைவதற்காக இதுவரை கண்டு கொள்ளப்பட்ட பாதைகள் அனைத்தையும் பற்றிக் கிருஷ்னன் இதில் கூறுகிறார். இந்த வகையில் தான் இது மிகவும் சிறப்பானது. ஆனாலும் அது மொத்தமாக சேகரிக்கப்பட்டதொரு தொகுப்பு அல்ல. அவர் கூறும் விஷயம் காந்திஜி கூறுவது போல் அல்ல. இதுவும் சரி அதுவும் சரி, என்று கூறுவது போல் அல்ல. கிருஷ்ணன், "எந்தப் பாதை தனக்கு உகந்ததாக ஒவ்வொருவருக்கும் சரியாக உள்ளதோ, அதுவே அவனுக்கு முழுமையாக, சரியான பாதை; மீதியுள்ளவை அனைத்தும் அவனைப் பொறுத்தவரை தவறானவை. மற்றவனுக்கு மற்ற பாதை சரியானதானால், அதுவே பூரண உருவில் அவனுக்குச் சரியான முற்றிலும் உண்மையான பாதை. மீதியுள்ள பாதைகள் அவனுக்குத் தவறானவையே" என்கிறார். கீதை மிகவும் துணிவான நூல். இரண்டு கணங்களுக்கு முன், தானே சரியென்று கூறிய விஷயத்தை, இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அடியோடு தவறு என்று கூறி, தற்போது கூறுவது மட்டுமே சத்தியம் என்று அடித்துச் சொல்லும் துணிவு வெகு சிலருக்கே இருக்க முடியும். அடுத்த இரு கணத்தில், ''அதுவும் மிகவும் தவறானது, இப்பொழுது நான் கூறுவது தான் மிகவும் சரியானது” என்று கூறும் துணிவு! இவ்வளவு சம்பந்தா சம்பந்தமற்று இருக்கும் இந்த வகை சாகஸம், உள்ளுக்குள், உன்னத நிலை அடைந்து விட்டவரைத் தவிர வேறு யாராலும் காட்ட முடியாது.